சமூக உதவிகளுடன் பொங்கலன்று புதிய தொடக்கம் கண்ட ஞானானந்தம் 'மி‌‌ஷன்'

சமூக சேவை­யில் ஈடு­பட்­டு­வ­ரும் ஞானா­னந்­தம் ‘மிஷன்’ சமூக உதவி­க­ளு­டன் பொங்­கல் அன்று சிங்­கப்­பூ­ரில் அதி­கா­ர­பூர்­வ­மாக நிறு­வப்­பட்­டது.

பிடோக் நார்த்­தி­லுள்ள ‘காமன் கிர­வுண்ட் சிவிக் சென்­ட­ரில்’ நடைபெற்ற நிகழ்ச்­சி­யில், சிறப்பு விருந்­தி­னர்­க­ளாக அன்-நஹ்தா பள்­ளி­வா­ச­லின் சமய நல்­லி­ணக்க மையத்­தின் இயக்­கு­நர் திரு­மதி உஸ்­தாஸா லியானா ரோஸ்லி அஸ்­மாரா, ராணுவ மருத்­துவ கல்­விக் ­க­ழ­கத்­தின் தள­பதி கர்­னல் டாக்டர் ஷாலினி அரு­ளா­னந்­தம் ஆகி­யோ­ரு­டன் பிரிட்­டிஷ் அர­சாங்­கத்­தின் கௌரவ கொள்கை ஆலோ­ச­கரான டாக்­டர் தர்­ஷனா ஸ்ரீத­ரும் இணையம் வழி பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

உடற்குறையுள்ளோருக்கு சக்கர நாற்­காலி, வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு மாதாந்­திர மளிகைப் பொருள் பற்றுச்சீட்டு, மாண­வர்­களுக்கு கல்வி உதவி நிதி ஆகி­ய­ உதவிகளை பொங்­கல் அன்று ஞானா­னந்­தம் ‘மிஷன்’ வழங்கியது.

‘ஹோப் இனி­ஷி­யேட்­டிவ் அலை­யன்ஸ்’, ‘சோகேர்’ அமைப்­பு­க­ளின் ஆத­ர­வில் தங்­கு­வி­டு­தி­யில் வசிக்­கும் 18 பேருக்­கும்; ‘புரோ­ஜெக்ட் ஹில்ஸ்’ அமைப்­பு­டன் இணைந்து ஓரறை வாடகை வீடு­களில் வசிக்கும் 25 குடும்­பங்­களுக்கும் தலா $100 பற்­றுச்­சீட்டுகள் வழங்­கப்­பட்டன.

ஸ்ரீ நாரா­யண ‘மிஷன்’ இல்­ல­வா­சி­கள் மூவ­ருக்குச் சக்­கர நாற்­கா­லி­கள் வழங்­கப்­பட்­டது.

சமூ­கப் பணி­களில் ஈடு­படும் மாண­வர்­க­ளுக்கு உதவ, சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழகத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் $4,000 நிதி­ உதவித் திட்டமும் அறிவிக்கப்பட்டது.

"எல்லா படைப்புகளும் கடவுளுக்கு சொந்தமானது, அனைத்தும் அவருடைய குழந்தைகளே. எதுவும் நமக்கு சொந்தமானது அல்ல. கடவுளுடைய பார்வையில் யாரும் பெரிதாகவோ குறைவாகவோ இல்லை. கடவுளின் மொழி அன்பு. அவரது மதம் இரக்கம். அவரது சமூகம் அனைத்து உயிரினங்களுக்கும் தன்னலமற்ற சேவையாகும். இதுவே எங்கள் அமைப்பான ஞானானந்தம் மிஷனின் முக்கிய கொள்கை," என்றார் ஞானானந்தம் மி‌‌ஷன் அனைத்துலக அமைப்பின் இயக்குநரும் ஸ்ரீ ஞானானந்த கிரி பீடத்தின் தலைவரும் பீடாதிபதியுமான பூஜ்யஸ்ரீ நிரஞ்சனானந்த கிரி ஸ்வாமிகள்.

“இனம், மொழி, சமய வேற்­று­மை­க­ளைப் பாரா­மல் உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்கு தொடர்ந்து உதவி புரி­வது எங்­கள் இலக்கு,” என்­று தெரிவித்தார் ஞானா­னந்­தம் ‘மிஷன்’ அமைப்­பின் இயக்­கு­நர் குழு­வில் சேவை­யாற்­றும் டாக்டர் கஜன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!