பண்புநெறிகளைப் போற்ற பொங்கல் கொண்டாடும் தூதரகம்

முதல் அறு­வ­டையை சூரி­ய­னுக்கு அர்ப்­ப­ணித்து நன்றி கூறும் உழவர் திரு­நாள் சிங்­கப்­பூ­ரி­லுள்ள இலங்கைத் தூத­ர­கத்­தில் கடந்த வியா­ழக்­கி­ழமை சிறிய அளவில் கொண்­டா­டப்­பட்டது.

மிகப்­பெ­ரிய விவ­சா­யப் பொரு­ளி­ய­லைக் கொண்ட நாடு­களில் ஒன்­றா­க­வும் விவ­சா­யத்­தைச் சார்ந்த பெரிய சமூ­கத்­தைக் கொண்ட நாடா­க­வும் திக­ழும் இலங்­கை­யில் பொங்­கல் முக்­கிய விழா­வா­கக் கொண்­டா­டப்­ப­டு­கிறது.

“நன்றி கூறு­வது என்­பது இலங்கை சமூ­கத்­தின் முக்­கியப் பண்­பாடு. தைப்பொங்­கல் அன்று முதல் அறு­வ­டை­யைச் சூரி­ய­னுக்கு அர்ப்­ப­ணிக்­கும் பாரம்­ப­ரி­யம், தொன்று தொட்டு இலங்கை சமூ­கம் கொண்­டா­டி­வ­ரும் பண்­பு­நெறி­க­ளை பிர­தி­ப­லிக்­கிறது,” என்று தெரிவித்தார் சிங்­கப்­பூ­ருக்­கான இலங்­கைத் தூதர் திருவாட்டி ச‌ஷி­கலா பிரே­ம­வர்­தினி.

“இலங்­கை­யின் தேசிய கலா­சா­ரத்­தின் பிர­தான அங்­க­மாக தைப்பொங்­கல் உரு­வெ­டுத்­துள்­ளது,” என்­று அவர் விவரித்தார்.

நொவீனா, கோல்ட்­ஹில் பிளா­சா­வில் உள்ள இலங்­கைத் தூதரக அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்ற பொங்­கல் விழா­வில் அலு­வலக ஊழி­யர்­களும் ஸ்ரீ செண்­பக விநா­ய­கர் கோயில் ஆல­யம், சிங்கப்­பூர் சிலோன் தமி­ழர் சங்­கம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த நிர்­வா­கி­களும் பங்­கேற்­றுச் சிறப்பித்தனர்.

கிரு­மிப் பர­வல் சூழ­ல் காரணமாக இந்த ஆண்டு சிறிய அள­வில் பொங்­கல் விழா கொண்­டா­டப்­பட்­ட­தாக தூத­ரகம் கூறி­யது.

- இர்­ஷாத் முஹம்­மது

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!