2022 நல்லாசிரியர் விருதுக்கான முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன 

தமிழாசிரியர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் நல்லாசிரியர் விருதுக்கான முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன.

சிங்கப்பூரில் தமி­ழா­சி­ரி­யர்­க­ளின் உன்­ன­தப் பணியை அங்­கீ­க­ரித்­துப் பாராட்­டும் மிக உய­ரிய விரு­தான நல்­லா­சி­ரி­யர் விருதை தமிழ் முர­சு, சிங்­கப்­பூர்த் தமி­ழா­சி­ரி­யர் சங்­க­ம், தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

இவ்விருது தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக்கல்லூரி ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் இரு விருதுகள் வழங்கப்படும்.

இப்பிரிவுகளுக்கு மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் முன்மொழிவுகளை அனுப்பிவைக்கலாம்.

மேலும், வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விருது, தேசிய கல்­விக் கழ­கத்­தின் சிறப்பு பயிற்சி ஆசி­ரி­யர் விருது ஆகியவையும் வழங்கப்படும்.

தேர்வு பெறுவோருக்கு நல்லாசிரியர் விருது நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும். விழா இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருதை இதுவரையில் 209 ஆசிரியர்கள் பெற்றுள்ளனர்.

முன்மொழியும் படிவங்களை பிப்ரவரி 7ஆம் தேதி திங்­கட்­கி­ழமை முதல் அனுப்ப தொடங்கலாம்.

முன்மொழிவுகளைப் பதிவு செய்ய, ஏப்­ரல் மாதம் 29ஆம் தேதி இறு­தி­நாளாகும்.

பரிந்­துரை செய்­யும் படி­வங்­களை அனைத்­துப் பள்­ளி­க­ளி­லும் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

அல்­லது https://www.tllpc.sg, https://www.tamilmurasu.com.sg ஆகிய இணை­யப் பக்­கங்களில் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

மேலும் உங்­கள் பரிந்­து­ரை­களை https://go.gov.sg/mitt-tl-2022-tl, https://go.gov.sg/mitt-2022-form-el ஆகிய முக­வரிகளைப் பயன்படுத்தி இணையம் வழி­­யும் சமர்ப்­பிக்­க­லாம்.

நல்­லா­சி­ரி­யர் விரு­தைப் பற்றிய மேல் விவரம் அறிய மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி: MOE_TLLPC_Secretariat@moe.gov.sg

நல்­லா­சி­ரி­யர் விரு­துக்­குத் தகுதி பெறு­வோர்:

  • தமிழ்மொழியின்பால் மாணவர்களுக்கு ஆர்வத்தையும் புத்துணர்ச்சியையும் ஊட்டிக் கற்றுத் தருபவராக விளங்க வேண்டும்.

  • புத்தாக்கமும் படைப்பாக்கமும் கொண்ட கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் ஈடுபாட்டுக்கு வழிவகுப்பவராகத் திகழ வேண்டும்.

  • மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு அவர்களிடத்தில் விரும்பத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.


நல்­லா­சி­ரி­யர் விரு­துக்கு முன்­மொ­ழி­யும் வழி­முறை பற்­றிய குறிப்பு­கள்:

  • விருதுக்குத் தகுதியானவர் எனத் தாங்கள் கருதும் ஆசிரியரைத் தெரிவுசெய்து, உங்கள் தெரிவுக்கான காரணங்களை விளக்கி எழுதி, முன்மொழியும் படிவத்தை நிறைவு செய்து அனுப்பவும். நீங்கள் பரிந்துரைக்கும் ஆசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கு விருதும் ரொக்கமும் வழங்கப்படும்.

  • மாணவர்கள், பெற்றோர்கள், சக ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளித் தலைவர்கள் ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்களைப் பரிந்துரைத்து முன்மொழியும் படிவங்களை பிப்ரவரி 7ஆம் தேதி திங்கட்கிழமை முதல் அனுப்பி வைக்கலாம்.

  • தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி, மில்லெனியா கல்வி நிலையம் ஆகியவற்றில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் இந்த விருதுக்கு முன்மொழியப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!