சமரச நடுவர் கல்வி அனுபவங்கள்

'அறிவுரை கூறுவது நடுவர் பணியல்ல'

பி. ராமச்சந்திரன், 66

நான்கு மொழிகளில் திறன் பெற்றவரும் மனநல ஆலோசகராகவும் பணியாற்றும் 66 வயது பி ராமச்சந்திரன், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக மேற்கொண்ட சமரச நடுவர் பணி தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகக் கூறுகிறார்.

ஒருமுறை சக்கர நாற்காலியில் 90 வயது தந்தையும் 80 வயது தாயாரும் தங்கள் ஐந்து பிள்ளைகளுடன் வந்தனர். தந்தைக்கும் தாயாருக்கும் பிள்ளைகளிடமிருந்து போதிய பணம் கிடக்காதது ஆரம்பப் பிரச்சினையாக இருந்தது. ஆயினும், அன்பார்ந்த முறையில் இரு தரப்பினரிடம் பேசியதையடுத்து இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அந்தப் பிள்ளைகள் எந்த நிர்ப்பந்தமுமின்றி எதிர்பார்த்ததைவிட அதிக பணத்தைத் தந்தது தம்மை நெகிழச் செய்ததாகத் திரு ராமச்சந்திரன் கூறினார்.

அண்டை வீட்டாரின் இரைச்சலால் நடுவரை நாடிய மற்றொருவர், இறுதியில் அந்த அண்டைவீட்டாரின் நெருங்கிய நண்பரானதையும் இவர் நினைவுகூர்ந்தார்.

பாதிக்கப்பட்டோரின் வலியைத் தமது வலியாக உணரும் குணம் சில நேரங்களில் சிரமத்தை ஏற்படுத்தினாலும் அறிவுரை கூறுவது தமது பணியல்ல என்றும் எந்தப் பாரபட்சமுமின்றி இரு தரப்பு வாதங்களைக் கேட்டு வழிகாட்டுவதே தமது கடமை என்று இவர் குறிப்பிட்டார்.

'தீர்வு இல்லாவிட்டாலும் முன்னேற்றமே'

எம். தியாகராஜன், 58

ஏதாவது ஒரு திறனை மேம்படுத்தத் தமது 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' தொகையைப் பயன்படுத்த நினைத்த பலதுறைத் தொழிற்கல்லூரி மூத்த விரிவுரையாளரான 58 வயது திரு எம் தியாகராஜன், சமரச நடுவர் பயிற்சியைத் தேர்வு செய்தார். கடந்தாண்டு ஜூலை மாதம் பயிற்சி பெற்ற திரு தியாகராஜன், ஒரு கலந்துரையாடலில் நடுவராக செயல்பட்டிருக்கிறார்.

"நடுவராகப் பணியாற்றிய என் முதல் அனுபவத்தில், இரண்டு கட்சிக்காரர்களில் ஒருவர்தான் வந்தார், மற்றொருவர் வரவில்லை. இதனை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை," என்று அவர் கூறினார். ஒரு தரப்பினர் பேசுவதை மட்டும் கேட்கவேண்டிய சூழல் ஏற்பட்டாலும் அவருக்கு உரிய தீர்வுகளை கலந்துரையாடி அவரது விவகாரத்தில் ஒரளவு முன்னேற்றத்தைத் தம் பயிற்றுவிப்பாளர்களின் துணையுடன் ஏற்படுத்த முடிந்ததாகத் திரு தியாகராஜன் தெரிவித்தார்.

"தீர்வு உடனே ஏற்படாவிட்டாலும் முன்னேற்றங்களால் மகிழும் மனப்பாங்கை நான் கற்றுக்கொண்டேன்," என்று இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான திரு தியாகராஜன் கூறினார்.

'வெற்றி தோல்வி இல்லை'

வி. பி. ஜோதி, 71

இரு தரப்பினருக்கிடையிலான வேறுபாடுகளைக் களையும் பணி, ஓய்வுபெற்ற வர்த்தகராகவும் மனிதவள நிர்வாக நிபுணருமான திரு ஜோதிக்குப் புதிதல்ல. ஆயினும், எவர் பக்கத்தில் நியாயம் உண்டு, இல்லை என்பதை முடிவு செய்வதை நடுவர்கள் தவிர்க்கவேண்டும் என்பதால் மனிதவள நிர்வாகியாகச் செயல்பட்டதுபோல் இயங்க முடியாது என்றும் இவர் கூறினார். கடந்தாண்டு ஜூலை மாதம் சமரச நடுவருக்குரிய பயிற்சியைப் பெற்ற திரு ஜோதி, ஒருமுறை நடுவராகச் செயல்பட்டுள்ளார்.

"பிலிப்பீன்சிலிருந்து பணிப்பெண் ஒருவரை வரவழைக்க முதலாளி பணிப்பெண் முகவை ஒன்றுக்குப் பணம் தந்தார். கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக அந்தப் பணிப்பெண்ணை அந்த முகவையால் வரவழைக்க இயலவில்லை. முதலாளியின் பணத்தைத் திருப்பித் தர முகவை ஒப்புக்கொண்டாலும் எவ்வளவு பணம் தரவேண்டும் என்பதில் சர்ச்சை எழுந்தது. எனினும், அந்தப் பிரச்சினை சுமுகமான கலந்துரையாடலின்வழி ஒரு மணி நேரத்திற்குள் தீர்ந்தது," என்று திரு ஜோதி கூறினார். வெற்றி தோல்வி என்பது இம்முறையில் இல்லாததே இதன் சிறப்பு என்றும் தீர்வுகளைத் தேட தாங்களாக முன்வரும் இரண்டு தரப்பினருமே வெற்றியாளர்கள்தான் என்றும் இவர் குறிப்பிட்டார்.

படங்கள்: திமத்தி டேவிட் / தமிழ் முரசு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!