தலைமைச் சர்ச்சையால் மூடப்பட்ட சிங்கப்பூர் இந்தியர் சங்கம் மீண்டும் திறப்பு

சிங்கப்பூர் இந்தியர் சங்கம் வியாழக்கிழமை (பிப்ரவரி 10) அன்று மீண்டும் செயல்படும் என்று கூறப்பட்டது.

நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தொடர்ந்து, சங்க வளாகம் கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 7) அன்று மூடப்பட்டது.

சங்கத்தின் வளாகம் வியாழக்கிழமை அன்று மீண்டும் திறக்கப்படும் என்று கூறிய சுற்றறிக்கையை, சிங்கப்பூர் இந்தியச் சங்கத் தலைவர் விஷ்ணு பிள்ளை புதன்கிழமை இரவு அனுப்பினார்.

அதில் பொறுமை காத்ததற்காக உறுப்பினர்களுக்கு நன்றிகூறிய அவர், சங்கத்தின் செயல்பாடுகளுக்கு தற்போதைய நிர்வாகக் குழுதான் பொறுப்பு வகிப்பதாகவும் பதில் சொல்லும் இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமை அன்று சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் நடந்தது.

அதில் தற்போதைய நிர்வாகக் குழுவுக்கு பதிலாக, சங்கத்தின் துணைத்தலைவர் தமிழ் மாறன் தலைமையில் இடைக்கால நிர்வாகக் குழுவை அமைக்க உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

அதை அடுத்து, சங்க வளாகத்தை மூட தற்போதைய தலைவர் விஷ்ணு பிள்ளை முடிவு செய்தார்.

இதனால் பேலஸ்டியர் ரோட்டில் இருக்கும் சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் 800 உறுப்பினர்கள் மூன்று நாள்களாக வளாகத்தில் நுழைய முடியவில்லை.

விளையாட்டுப் பயிற்சிக்காக வளாகத்தைப் பயன்படுத்த எண்ணி வந்த சிலர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

சங்கத்தின் நிர்வாகக் குழுத் தேர்தல் என் நடத்தப்படாமல் இருந்தது பற்றி ஆண்டு பொதுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து, முன் அறிவிப்பு இன்றி தேர்தல் நடத்தப்பட்டு புதிய இடைக்கால நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.

அந்த இடைக்காலக் குழுவின் தேர்வு செல்லுமா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

திரு விஷ்ணு தேர்தல் செல்லாது என்று கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!