சவால் மூலம் மேம்பாடு காண்கிறார்

நாள்­தோ­றும் செய்­யும் அலு­வ­லக வேலை எளி­தாக இருந்­த­போ­தும் சவால் வேண்­டும் என விரும்பி, திறன் மேம்­பாடு செய்த மர்த்­தினி கிருஷ்­ணன், 36, தற்­போது கப்­பல் துறை­யில் பணி­யாற்­று­கி­றார்.

வழக்­க­மாக பல ஆண்டு பயிற்சி தேவைப்­படும் பணி­களுக்கு விரை­வாக பயிற்­சி­ய­ளிக்­கும் திட்­டத்­தில் சேர்ந்­த­வர்­களில் திரு­மதி மர்த்­தி­னி­யும் ஒரு­வர்.

மின்­ன­ணு­வி­யல் மற்­றும் கணி­னிப் பொறி­யி­யல் துறை­யில் 2010ஆம் ஆண்டு பட்­ட­யம் பெற்ற திரு­மதி மர்த்­தினி, தொடக்­கத்­தில் சுங்­கத்­து­றை­யில் அதி­கா­ரி­யா­கப் பணி­யாற்­றி­னார். ஆயி­னும், சுழற்சி முறை­யில் வேலை செய்­தது மிகவும் இவ­ருக்கு சிர­ம­மாக இருந்­த­தால் தேசிய பல்­க­லைக்­கழக மருத்­து­வ­ம­னை­யில் அலு­வலக நிர்­வா­கப் பணி­யில் சேர்ந்து, அதன் பின்­னர் கட்­டு­மான நிறு­வனம் ஒன்­றில் பணி­யாற்­றி­னார்.

ஆசி­ரி­யா­கப் பணி­யாற்­றும் தம் சகோ­த­ரர், கப்­பல் துறை வளர்ந்து வரு­வ­தா­கக் கூறி­ய­தால், அதில் சேர முடிவு செய்­தார் திரு­மதி மர்த்­தினி. ஆயி­னும், புதிய துறை­யில் சேரு­வது சவால்­மிக்­கது என்­பது இவ­ரு­டைய கண­வ­ரின் அக்கறை­யாக இருந்­தது. இறு­தி­யில், தெரிந்த வேலையை மட்­டும் செய்து வளர்ச்சி காண்­ப­தோடு நிறுத்­தி­வி­டா­மல், கூடு­தல் சவாலை எதிர்­கொள்ள திரு­மதி மர்த்­தினி உறுதி கொண்­டார்.

'எல்­என்ஜி' எனப்­படும் திரவ இயற்கை எரி­வா­யு­வைக் கொண்­டு­செல்­லும் கப்­பல்­க­ளின் எரி­பொருள் தேவை­களை மேற்­பார்வை­யி­டும் பணிக்­கான விண்­ணப்­பத்தை 2018ஆம் ஆண்­டில் கெப்பல் நிறு­வ­னத்­தி­டம் இவர் சமர்ப்­பித்­தார். ஆண்­டி­று­தி­யில் அந்­நி­று­வ­னம் திரு­மதி மர்த்­தி­னியை வேலைக்­குச் சேர்த்­தது. மூன்று மாத பயிற்­சிக்­குப் பிறகு புதிய வேலைக்கு இவர் தகு­தி­பெற்­றார். பயிற்சி கடு­மை­யாக இருந்­தா­லும் வேலை­யி­டத்­தில் திரு­மதி மர்த்­தி­னிக்­குத் தகுந்த உதவி கிடைத்­தது.

இந்­தப் பயிற்­சிக்­கான செலவை இவ­ரது நிறு­வ­னம் ஏற்­ற­தால் பயிற்­சி­யைச் சரி­யா­கச் செய்­ய­வேண்­டும் என்­ப­தி­லேயே திரு­மதி மர்த்­தி­னி­யின் கவ­னம் இருந்­தது. இரண்டு பிள்ளை­க­ளைக் கவ­னித்­துக்­கொண்டே படிப்­பது சவா­லாக இருந்­தா­லும் வெற்­றி­க­ர­மான கற்­ற­லுக்கு நேர நிர்­வா­கம் கைகொடுத்­த­தாக இவர் கூறி­னார்.

படம்: சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!