அறுபதுகளிலும் தீராக் கற்றல் தாகம்

தொழில் வழி­காட்­ட­லுக்­கான ஓராண்­டு­கால பட்­ட­யக்­கல்­வியை அண்­மை­யில் முடித்த திரு­வாட்டி ராதா பழ­னி­யாண்டி, 62, கொவிட்-19 கிரு­மிப் பர­வல் தொடங்­கி­ய­து­மு­தல் இப்­போது வரை வீட்­டி­லி­ருந்து சுய­மாக கற்­ற­லில் ஈடு­ப­டு­கி­றார்.

கடந்த சில ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூர் சிறைச் சேவை­யி­லும் தொழில் வழி­காட்­டல் பயிற்­று­விப்­பா­ள­ராக இருந்த திரு­வாட்டி ராதா, மன­தின் இயல்­பு­களை அள­விட்டு ஆரா­யும் முறை­யைப் (pyschometric tool) பற்­றிய தமது புரி­த­லை­யும் பிற­ருக்கு வாழ்க்­கைத் தொழி­லைத் தேர்ந்­தெ­டுப்­பது பற்றி அறி­வு­றுத்­தும் திறன்­க­ளை­யும் பெற, மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் ரிபப்ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் சேர்ந்­தார்.

"இந்­தப் பட்­ட­யக்­கல்­வியை வழங்­கும் ஒரே இடம் ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி என்­பதை நான் ஆய்வு செய்­த­போது தெரிந்­து­கொண்­டேன்," என்­றார் இவர்.

பட்­ட­யக்­கல்­வி­யின் தொடக்­கக்­கட்­டம் சவா­லாக இருந்­த­தாக இவர் சொன்­னார்.

"காலஞ்­சென்ற என் சகோ­தரி உயி­ரு­டன் இருந்­த­போது எனக்கு ஊக்­கம் அளித்­தார். நாம் ஒன்­றைக் கற்­கும்­போது இடை­யில் அதை விட்­டோ­மென்­றால் மீண்­டும் தொடர்­வது மிகக் கடி­னம். எனவே எனது கல்­வி­யைப் பாதி­யி­லேயே விட்­டு­விடாமல் அதை எப்­ப­டி­யா­வது முடித்­து­விட வேண்­டும் என்­ப­தில் நான் உறு­தி­யாக இருந்­தேன்," என்று திரு­வாட்டி ராதா கூறி­னார்.

வேலை­யைத் தள்­ளிப்­போ­டு­வ­தை­யும் சோம்­ப­லை­யும் தவிர்க்க, திரு­மதி ராதா தமது கைப்பேசி­யி­லி­ருந்து நினை­வூட்­ட­லைப் பெறு­வார். அதன்­மூ­லம் தமது குறிக்­கோள்­களை மீண்­டும் நினை­வில் கொள்­வார்.

"இளம் வய­தில் என் பெற்­றோர் பல­முறை என்­னைப் படிக்­கச் சொல்­லு­வ­து­போல் இப்­போது என்­னைப் படிக்க நினை­வூட்­டும்­படி தொழில்­நுட்­பத்­தின் உத­வியை நாடு­கி­றேன்," என்று இவர் கூறி­னார்.

'அலி­சன்', 'கோர்­சிரா' உள்­ளிட்ட இணை­யக் கற்­றல் தளங்­க­ளில் இருந்து குறும்­பா­டங்­களை அவ்­வப்­போது படிப்­ப­து­டன் பிற­ரை­யும் கற்­கத் தூண்­டு­கி­றார் இவர்.

மைக்­ரோ­சா­ஃப்ட் டீம், ஸும் ஆகிய காணொளி உரை­யா­டல் தளங்­க­ளைப் பயன்­ப­டுத்தி இவர் தம் நண்­பர்­க­ளை­யும் தம்­மு­டன் சேர்த்­துக்­கொண்டு கற்­ற­லில் ஈடு­பட ஊக்­கு­விக்­கி­றார். நிர­லிடு­தல், வாழ்க்­கைத் தொழில் மேம்­பாடு, பணித்­திட்ட மேம்­பாடு உள்­ளிட்ட வகுப்­பு­களில் சேர்ந்து இவர் புதிய திறன்­க­ளைப் பெற்­று இருக்­கி­றார்.

2020 ஏப்­ரல், மே மாதங்­களில் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடப்­பில் இருந்­த­போது பல வேலை­யி­டங்­களும் பயிற்சி நிலை­யங்­களும் மூடப்­பட்­டி­ருந்­தன. அந்­தக் கால­கட்­டத்­தைக் கற்­ற­லுக்கு உகந்த நேர­மாக இவர் கரு­தி­னார்.

"இணை­யம்­வழி கற்­கும்­போது கற்­ற­லுக்­கான நேரத்­தை­யும் வேகத்­தை­யும் தீர்­மா­னிப்­ப­தில் நீங்­களே முடிவு செய்­ய­லாம்," என்று திரு­வாட்டி ராதா கூறி­னார்.

அத்­து­டன், நேரடி வகுப்­ப­றை­யில் ஆசி­ரி­யர் கூறு­வதை கவ­னக்­கு­றை­வால் உள்­வாங்­கா­மல் போவதால் ஏற்­படும் குறையை இணைய வகுப்­பு­கள் போக்­கு­வ­தா­க­வும் இவர் கூறி­னார்.

எதற்­கா­கக் கற்­கி­றோம் என்­பதை முடிவு செய்த பின்­னர் கற்­ற­லுக்­கான கால­அட்­ட­வணை அமைப்­பது முக்­கி­யம் என்று திரு­வாட்டி ராதா வலி­யு­றுத்­து­கி­றார்.

"எந்­தெந்த கால­கட்­டத்­திற்­குள் எந்­தெந்த திறன்­க­ளைப் பெற­வேண்­டும் என்­பதை நான் முடி­வெ­டுப்­பேன். நேர்­மு­கத் தேர்­வு­களில் எனக்கு இருக்­கும் திறன்­க­ளைக் கண்டு முத­லா­ளி­கள் வியக்­க­வேண்­டும் என்ற குறிக்­கோ­ளு­டன் திறன்­களைத் தொடர்ந்து கற்­பேன்," என்று இவர் சொன்­னார்.

கடி­ன­மாக இருந்த பாடங்­க­ளா­லும் நேர­மின்­மை­யா­லும் 20 ஆண்டு­க­ளுக்கு முன் பாதி­யில் விட்ட பட்­டப்­ப­டிப்பை மீண்­டும் தொடர்­வதே திரு­வாட்டி ராதா­வின் அடுத்த இலக்கு.

"கற்­ப­தில் இன்­பம் காண்­ப­வர்­கள் கற்­றுக்­கொள்­வதை நிறுத்­து­வதில்லை. அவர்­க­ளது இன்­பத்­திற்­கும் எல்­லை­யில்லை," என்­றார் இவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!