மதிப்பும் மரியாதையும் மனிதகுணம் தரும்

குடும்ப உறுப்­பி­னர்­களும் சமு­தா­ய­மும் தரும் ஆத­ர­வால் கடந்த ஆண்டு நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்பு ஆணைக்கு உள்­ளா­னோ ரில் 87 விழுக்­காட்­டி­னர் ஆணை விதிகளை முழுமையாகக் கடைப் பிடித்தனர். கடந்த ஒன்­பது ஆண்­டு­களில் இந்த விகி­தமே ஆக அதி­கம் என்று நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்பு மற்­றும் சமூக மறு­வாழ்வு சேவைப் பிரி­வின் அறிக்கை தெரி­விக்­கிறது. அந்த அறிக்­கையை சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு இம்­மா­தத் தொடக்­கத்­தில் வெளி­யிட்­டது.

நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்பு ஆணையை நிறை­வேற்­று­ப­வர்

களுக்கு சமூ­கத்­தில் பங்­காற்­று­வ­தற்­கான வாய்ப்­பு­களை அதி­கா­ரி­கள் உரு­வாக்கி வரு­கின்­ற­னர்.

குறிப்­பாக, சமூக சேவை வழி நல்ல முன்­மா­தி­ரி­களை அறி­

மு­கப்­ப­டுத்தி, ஆணையை நிறை­வேற்­று­வோ­ரின் பொறுப்­பு­ணர்வை வளர்க்க அவர்­கள் உத­வு­கின்­ற­னர்.

கடந்­தாண்டு கொவிட்-19 கிரு மிப்­ ப­ர­வ­லால் இந்த ஆணையை நிறை­வேற்­று­வோர் வெளி இடங்­களில் நேரம் செல­வ­ழிப்­பது குறைந்­த­தா­க­வும் வீட்­டுக்­குள்ளே அவர்­கள் அதிக நேரம் இருந்­தது குடும்­பப் பிணைப்பை வலுப்­ப­டுத்­தும் வாய்ப்பை அதி­க­ரித்­த­தா­க­வும் அறிக்கை குறிப்­பி­டு­கிறது.

நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்பு ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டா­லும் தனிநபர்­களை சரி­யான பாதை­யில் இட்­டுச் செல்­வது குடும்­பமே என்­றது அறிக்கை.

தவறு செய்­வோ­ரைத் திருத்த அனைத்­துத் தரப்­பி­ன­ருமே முயன்­றா­லும் சில நேரங்­களில் கண்­கா­ணிப்பு ஆணை பல­ன­ளிக்­காது என்­றார் ஏழு ஆண்­டு­க­ளாக நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்பு அதி­கா­ரி­யா­கப் பணி­யாற்­றும் திவ்யா பிள்ளை, 32, (படம்) தமிழ் முர­சி ­டம் தெரி­வித்­தார்.

பெரி­ய­வர்­க­ளாக மாறும் இளை­யர்­க­ளுக்கு சிறந்த முன்­னு­தா­ர­ணம் தேவை எனக் கூறும் இவர், நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்பு ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டோ­ருக்கு குடும்­பத்­தி­ன­ரும் சமு­தா­ய­மும் ஆத­ர­வுத் தூண்­க­ளாக இருக்­க­வேண்­டும் என்­றார்.

“சமூ­கத்­தில் இவர்­களை அங்­கத்தினர்களாகச் சேர்க்­கும்­போது பிற­ரால் மதிக்­கப்­ப­டு­வதை இவர்­கள் உணர்­கின்­ற­னர். இந்த உணர்வே இவர்­கள் மீண்­டும் குற்­றம் புரி­வ­தைத் தடுத்து புதிய மனி­தர்­க­ளாக்­கும்.

“நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்பு ஆணை­யின் நிபந்­த­னை­க­ளுக்­குக் கட்­டுப்­ப­டா­த­வர்­கள் நீதி­மன்­றத்­திற்கு மீண்­டும் கொண்டு செல்­லப்­ப­ட­லாம்; மீண்­டும் தண்­டிக்­கப்­ப­ட­லாம்.

“இத்­த­கை­யோர் மாறத் தவ­றும்­போ­தும் அதற்­கான கார­ணங்­கள் என்­னென்ன, அவற்­றைத் தீர்க்க வழி என்ன என்­பதை ஆராய்­வது முக்­கி­யம்.

“என்­னைப் போன்ற நன்ன டத்­தைக் கண்­கா­ணிப்பு அதி­கா­ரி­கள் வழி­காட்­டும் அதே­நே­ரம் முக்­கி­ய­மான சேவை­களை அவர்­கள் பெற உத­வு­வது, திறன் மேம்­பாட்­டில் உத­வு­வது போன்­ற­வற்­றின் மூலம் அவர்­க­ளி­டையே நல்ல மாற்­றத்தை ஏற்­ப­டுத்­த­லாம்,” என்­றார் குமாரி திவ்யா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!