அமெரிக்கப் படைவீரர்களுடன் ஓர் அற்புதமான போர்ப் பயிற்சி

அமெ­ரிக்க ஆகா­யப்­படை நடத்­திய ‘சிவப்புப் கொடி-அலாஸ்கா’ பயிற்­சி­யில் சிங்­கப்­பூர் குடியரசு ஆகா­யப்ப­டை­யின் ‘பீஸ் கார்­வின் வி (PC V)’ பிரிவைச் சேர்ந்த 140க்கும் மேற்­பட்ட ஆகா­யப்­படை வீரர்­கள் ‘F-15SG’ ரக போர் விமா­னங்­க­ளு­டன் கலந்­து­கொண்­ட­னர்.

அலாஸ்கா மாநி­லத்­தின் ஐயெல்­சன் ஆகா­யப்­படை விமா­னத்­த­ளத்­தில் ஜூன் 9ஆம் தேதி­முதல் ஜூன் 25ஆம் தேதி வரை நடை­பெற்ற இந்­ந­ட­வ­டிக்­கை­யில் அமெ­ரிக்க ஆகா­யப்­ப­டை­யின் ‘F-18’, ‘F-16’, ‘EA-18G’, ‘A-10’ ரக போர் விமா­னங்­கள் உட்­பட 80க்கும் மேற்­பட்ட விமா­னங்­கள் பங்கேற்றன. இரு ஆகா­யப்­ப­டை­களும் தத்­ரூ­ப­மான போர் சூழல்

களி­லும் மாதிரி போர்ப் பயிற்­சி­

க­ளி­லும் கலந்­து­கொண்டு தங்­கள் போர்­க்கால தயார்­நி­லை­யை­யும் செயல்­பாட்டு தகு­தி­க­ளை­யும் மேம்­ப­டுத்­திக்­கொண்­ட­ன.

இந்­தப் பயிற்­சி­யில் முதல் முறை­யா­கக் கலந்­து­கொண்ட ஆகா­யப்­படை பொறி­யா­ள­ரான ME2 பிரினைஷ் பிராயன் தேவ­

ரா­ஜன் தமது அனு­ப­வங்­க­ளை­யும் பகிர்ந்­து­கொண்­டார்.

“புலம், நீராற்­ற­லால் இயங்­கும் அமைப்­பு­களில் நான் வேலை செய்­த­தோடு அனைத்து போர் விமா­னங்­களும் எப்­போ­தும் பறப்

பதற்­குத் தயா­ரான நிலை­யில் இருப்­பதை உறுதி செய்­ய­வேண்டி இருந்­த­தால் இப்­ப­யிற்சி மிக­வும் தீவி­ர­மான ஒன்­றாக அமைந்­தது. ஆனால், அமெ­ரிக்­கப் பிரி­வு­க­ளு­டன் பணி­யாற்­றி­யது அற்­பு­த­மான அனு­ப­வ­மாக இருந்­தது,” என்று பிரினைஷ் கூறி­னார்.

‘கோப் தண்­டர்’ பயிற்சி என்ற பெய­ரில் நடத்­தப்­பட்டு வந்த ‘சிவப்­புக் கொடி - அலாஸ்கா’ போர்ப் பயிற்­சி­யில் சிங்­கப்­பூர் குடியரசு ஆகா­யப்­படை 1984ஆம் ஆண்­டி­லி­ருந்து பங்­கேற்று வரு­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!