உணவோடு பொறுப்பையும் சுமக்கும் ஷீலா

பிள்­ளை­களை பள்­ளிக்கு அனுப்­பிய பிறகு வீட்­டி­லேயே உட்­கார்ந்­தி­ருந்த 44 வயது திரு­மதி ஷீலா பத்­து­ம­லைக்கு, வேலைக்­குச் செல்­ல­வேண்­டும் என்ற ஆவல் ஏற்­பட்­டது. ஆவல் பூர்த்­தி­ய­டைந்­தது. வேலைக்­குப் போனார்.

பகு­தி­நே­ரக் காசா­ள­ராக விரைவு உணவு நிலை­யத்­தி­லும் பேரங்­கா­டி­யி­லும் வேலை பார்த்­த­போ­து­தான் வேலை­யை­யும் வீட்­டுப் பொறுப்­பு

­க­ளை­யும் சமா­ளிப்­ப­தில் சிர­மம் இருப்­பதை அவர் உணர்ந்­தார்.

தொடர்ந்து வீட்டிலுள்ள வேலை­களைக் கவ­னிக்­க இயலாமல் முறையற்ற நேரங்­களில் வேலை செய்யவேண்­டிய கட்­டா­யம், வீட்­டி­லி­ருந்து வேலை­யி­டத்­துக்­குச் சென்று வரும் களைப்பு, போக்­கு­

வ­ரத்­துச் செலவு ஆகிய கார­ணங்­க­ளால் தொடர்ந்து காசா­ள­ராக திரு­மதி ஷீலா­வால் பணி­பு­ரிய முடி­ய­வில்லை.

அப்­போது 'கிராப்' நிறு­வ­னத்­தி­லுள்ள வாய்ப்­பு­க­ள் பற்றி இவ­ருக்­குத் தெரி­ய­வந்­தது.

அங்கு இவர் உணவு விநி­யோக வேலை­யில் சேர்ந்து சுமார் ஒன்­றரை ஆண்­டு­கள் உருண்­டோ­டி­விட்­டன. தற்­போது இவர் குடும்­பத்தைக் கட்டிக்காப்பதோடு தனது மன­ந­லத்­தை­யும் நல்­ல­மு­றை­யில் பேணி வரு­கி­றார்.

பிள்­ளை­கள் பள்­ளிக்­குக் கிளம்­பும்போது 'கிராப்' உணவு விநி­யோக ஓட்­டு­நர் வேலை­யைத் தொடங்கி, பள்ளி முடிந்து அவர்­கள் வீடு­தி­ரும்பும்­போது தமது வேலையை முடித்துக்கொள்­கி­றார் திரு­மதி ஷீலா.

"வீட்­டி­லேயே இருந்­த­போது வெறும் வீட்­டுப் பொறுப்­பு­களை மட்­டும் கவ­னித்­துக்­கொள்ள சலிப்­பாக இருந்­தது. இத­னால், அடிக்­கடி எனது மகன்­க­ளி­டம் கோபப்­

ப­டு­வேன். அவர்­களும் நான் வீட்­டி­லேயே இருந்­த­தால் பொறுப்­பில்­லா­மல் இருந்­தார்­கள்.

"ஆனால், இப்­போது நான் வேலைக்­குச் சென்று வரு­வ­தால் என் மகன்­கள் பொறுப்­பு­டன் வீட்­டுப்­பா­டங்­களை செய்து எனக்கு உதவி செய்ய முயல்­கி­றார்­கள். இத­னால் மன­

வு­ளைச்­சல் குறை­கிறது," என்று நிம்­ம­தி­யு­டன் கூறு­கி­றார் இவர்.

உணவு விநி­யோக ஓட்­டு­ந­ராக தமது அனு­ப­வங்­க­ளை­யும் இவர் நம்­மி­டம் பகிர்ந்­து­கொண்­டார்.

"வெயி­லில் அலைந்து, திரிந்து உணவை வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் கொண்டு சேர்க்­கும்­போது தங்­க­ளது நன்­றி­யைத் தெரி­விக்க சிலர் தண்­ணீ­ரை­யும் குளிர்­பா­னங்­க­ளை­யும் வழங்­கு­வார்­கள். மழை­யில் நனைந்து வரும்­போது வேறு சிலர் பணம் கொடுப்­பார்­கள்.

"ஆரம்­ப கா­லத்­தில் ஒரு­ நாள் இடம் தெரி­யா­மல் பூன் லே வட்­டா­ரத்­தில் திக்குத் தெரியாமல் நின்­ற­போது எனது கண­வ­ரின் உத­வி­யோடு வெற்­றி­க­ர­மாக விநி­யோ­கத்தை செய்து முடித்­தேன். அதன் பிறகு, எனக்­கென ஒரு நண்­பர் குழுவை உரு­வாக்­கிக்­கொண்­டேன். திரு­மதி ஜெயா, திரு­மதி தனம் என என்­னைப்போல் 'கிராப்' உணவு விநி­யோ­கிப்­பா­ளர்­க­ளா­கப் பணி

­பு­ரி­யும் தாய்­மார்­க­ளின் நட்பு கிடைத்­தது.

"ஒரு­முறை நான் குளிர்­

பா­னத்தை வாடிக்­கை­யா­ளர் ஒரு­வ­ரி­டம் எடுத்­துச் சென்­ற­போது கை

த­வறி அத­னைக் கொட்­டி­விட்­டேன். ஆனால், எனது தவற்றை எடுத்­து­கூ­றிப் புரி­ய­வைத்­த­தால் அவர் அதி­க­மா­கக் கோபப்­ப­ட­வில்லை," என்று தமது வேலை அனு­ப­வங்­களை அடுக்­கி­னார் திரு­மதி ஷீலா.

தனது சில நண்­பர்­கள் இது­வரை 'ஏன் இந்த வேலையைச் செய்­கி­றாய், வேறு வேலையே இல்­லையா?' என்று தமது வேலையைப் பார்த்து கேள்வி கேட்­ட­போ­து 'இந்த வேலைக்கு என்ன' என்று மறு­கேள்வி கேட்­க­வேண்­டிய நிலை­இவ­ருக்குப் பல­முறை ஏற்­பட்­டுள்­ளது.

தம்மைப்போல 'கிராப்' உணவு விநி­யோ­கிப்பாளராகப் பணி­பு­ரி­யும் நண்­ப­ர் ஒருவரின் பிள்­ளை­கள் அவர் செய்­யும் வேலையை தரக் குறைவாகப் பார்ப்­ப­தா­க­க் கூறி­னார். ஆனால், தமது பிள்­ளை­களும் கண­வ­ரும் அப்படி இல்லை என்று மகிழ்­கி­றார் திரு­மதி ஷீலா.

"அனை­வ­ரின் ஆத­ர­வி­னால்­தான் என்­னால் வீட்­டுப் பொறுப்­பு­ க­ளைக் கவ­னித்­துக்­கொண்டு வேலைக்­கும் செல்ல முடி­கிறது.

"அது­வும் ஒரு தாயாக எனது கட­மை­க­ளைப் பூர்த்தி செய்­ய­வேண்­டிய கட்­டா­ய­மும் இருக்­கிறது," என்று சொல்லி முடித்த திரு­மதி ஷீலா, வேலை-குடும்­பம் சம­நி­லை­யைப் பரா­ம­ரிக்க விரும்­பும் பெண்­க­ளுக்கு ஒரு நல்ல உதா­ர­ண­மாகத் திகழ்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!