சிங்கப்பூர் கவிதை விழா 2022

சிங்­கப்­பூர் கவிதை விழா இந்த ஆண்டு, நேற்று முன்தினத்­தி­ல் இ­ருந்து ஆகஸ்ட் 10ஆம் வரை நடை­பெ­று­கின்­றது. தமிழ்க் கவி­தை­களை அலசி ஆரா­யும் மூன்று நட­வ­டிக்­கை­கள் ஆகஸ்ட் 5, 6, 7ஆம் தேதி­களில் இடம்­பெ­று­கின்றன.

என்.பி.எஸ் அனைத்­து­ல­கப் பள்­ளி­யின் ஐந்­தாம் ஆண்டு தமிழ்க் கவிதை, கதை பயி­ல­ரங்கு, ஆகஸ்ட் ஐந்­தாம் தேதி பிற்­ப­கல் ஒரு மணி முதல் மூன்­றரை மணி வரை நடை­பெ­றும். கவி­ஞர்­கள் சாம்­ராஜ், இசை இரு­வ­ரும் இணைந்து நடத்­தும் இப்­ப­யி­ல­ரங்­கில் மாண­வர்­கள் கவிதை, கதை குறித்த நுணுக்­கங்­க­ளைக் கற்­க­லாம்.

சிங்­கப்­பூர்க் கவி­தைத் தொகுப்பு­களை ஆராய்ந்து விமர்­சிக்­கும் முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ள­னர் ஏழு மாண­வர்­கள். கவி­தை­க­ளைக் குறித்த தங்­கள் பார்­வை­களை, புகழ்­பெற்ற கவி­ஞர்­க­ளின் துணை­யோடு இவர்­கள் தமி­ழில் படைக்­க­வி­ருக்­கின்­ற­னர்.

'நமக்­குள் கவிதை' என்ற இளை­யர் கவி­தைக் கருத்­த­ரங்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி 'தி ஆர்ட்ஸ் ஹவு­சின்' 'ப்ளே டென்' தலத்­தில் நேர­டி­யாக நடை­பெ­ற­ உள்­ளது. கவி­ஞர்­கள் பெருந்­தேவி ஸ்ரீநி­வாசன், கீதா சுகு­மா­ரன், இசை, சாம்­ராஜ் ஆகி­யோ­ர் இரண்டு மாத காலமாக மாணவர்களுக்கு வழி­காட்­டினர்.

"கவி­ஞ­ரின் கண்­ணோட்­டத்­தில் நின்று கவி­தை­களை ஆராய இத்­திட்­டம் வாய்ப்­ப­ளித்­தது. ஒவ்­வொரு கவி­தை­யும் தனித்­து­வ­மா­னது; இனி இலக்­கி­யங்­களை இத்­த­கைய கண்­ணோட்­டத்­தில் ஆராயவேண்­டும் என்ற எண்­ணத்தை இக்­க­ருத்­த­ரங்கு விதைக்­கும்," என்­றார் ஈசூன் இன்­னோவா தொடக்­கக்­கல்­லூரி மாண­வ­ரும் கருத்­த­ரங்­கப் படைப்­பா­ள­ரு­மான லக்ஷ்ம­ணன் சாய் பாலாஜி.

கவி­தை­களில் மறைந்­துள்ள தக­வல்­க­ளைப் புரிந்­து­கொள்ள முடிந்­துள்­ள­தா­கக் கூறி­னார் மற்­றொரு படைப்­பா­ள­ரான விக்­டோ­ரியா தொடக்­கக்­கல்­லூரி மாணவி ஏழு­மலை ரித்­திகா. கருத்­த­ரங்­கில் கலந்­து­கொள்­வோ­ர் தங்களைப் போலவே கவி­தை­யின்­பால் ஈர்க்­கப்­ப­டு­வர் என்றார் இவர்.

நிகழ்ச்­சி­யில், பார்­வை­யா­ளர்­கள் பங்­கேற்­கக்­கூ­டிய கலந்­து­ரை­யா­ட­லும் இடம்­பெ­றும். ­மா­ண­வர்­க­ளுக்கு வழி­காட்­டிய கவி­ஞர்­கள் நால்வரும் இதில் நேர­டி­யா­க­வும் இணை­யம் வாயி­லா­க­வும் உரை­யா­டுவர்.

"உள்­ளூர் இலக்­கி­யத்தை அடுத்த கட்­டத்­துக்கு இட்­டுச்­செல்ல இளை­யர்­கள் விமர்­ச­னத்­தில் ஈடு­ப­ட­வேண்­டும். இதன்வழி இலக்­கி­யத்­தில் இரு­வழித் தொடர்பை­யும் பன்­மு­கத்­தன்­மை­யை­யும் ஏற்­ப­டுத்­த­லாம். இன்­னும் எழு­தப்­படா விவ­கா­ரங்­களும் படைக்­கப்­படா பாணி­களும் உள்­ளன என்ற சிந்­த­னை­யைத் தூண்­டுவது நிகழ்ச்சியின் நோக்கம்," என்­றார் 'நமக்­குள் கவிதை' திட்­ட ஒருங்­கி­ணைப்­பா­ளர் விஷ்ணு வர்தினி.

தேசி­யக் கலை மன்­றம், ஆர்ட்ஸ் ஹவுஸ் லிமி­டெட், தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு ஆகி­ய­வற்­றின் ஆத­ர­வில் நடை­பெ­றும் கருத்­த­ரங்­கிற்குப் பதிவு செய்­ய­வேண்­டிய இறுதி நாள், ஆகஸ்ட் 5ஆம் தேதி.

தமி­ழில் நவீன கவி­தை­க­ளின் மொழி, போக்­கு­கள், பேசு­பொ­ருள், நுணுக்­கங்­கள், அமைப்பு ஆகி­யவை பற்­றிக் கலந்­து­ரை­யாட கவிதை வாசிப்பு நிகழ்ச்சி ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை ஆறரை மணி­யி­லி­ருந்து இரவு ஒன்­பது மணி வரை தேசிய நூலக வாரி­யத்­தில் நடை­பெ­றும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!