சிங்கப்பூர் இந்தியர்களின் தனித்துவ அனுபவங்கள்

மாதங்கி இளங்­கோ­வன்

சிங்­கப்­பூ­ரில் வளர்ந்த 38 தனிப்­பட்ட இந்­தி­யர்­க­ளின் வாழ்க்கை அனு­ப­வங்­களை அவர்­க­ளு­டைய சொந்தக் குர­லில் தொகுத்­துள்­ளது 'அவேர்' என்­னும் மக­ளி­ருக்­கான செயல், ஆய்­வுச் சங்­கம்.

கடந்த மாதம் வெளி­யி­டப்­பட்ட 'வாட் வி இன்­ஹெ­ரிட் - குரோ­விங் அப் இந்­தி­யன்' என்ற இந்த நூல் இந்­திய பெண்­ம­ணி­கள், ஆண்­ம­கன்­கள் ஆகி­யோர் சிங்­கப்­பூ­ரில் ஓர் இந்­தி­ய­ராக வள­ரும்­போது நேரி­டும் சவால்­க­ளை­யும் சுவா­ர­சி­ய­மான அனு­ப­வங்­க­ளை­யும் வர்­ணிக்­கிறது.

ஒரு சில நேரங்­களில் இந்­தி­யப் பாரம்­ப­ரி­யத்­தின் மகத்­து­வத்தை புரிந்­து­கொள்­ளா­மல் இந்­தி­யர்­

க­ளைக் கேலி செய்த நிகழ்­வு­கள் பல ஏற்­பட்­டுள்­ளன.

ஆனால், அதை மட்­டுமே மைய­மா­கக் கொள்­ளா­மல் எழுத்­தா­ளர்­கள் தங்­க­ளுக்கு ஓர் இந்­தி­ய­ராக இருப்­பது என்­ன­வென்­பதை அவர்­க­ளு­டைய கட்­டு­ரை­க­ளின் வாயி­லா­கப் பிர­தி­ப­லித்­துள்­ள­னர்.

உதா­ர­ணத்­திற்கு, எழுத்­தா­ள­ரான சரண்யா, தமது தந்­தை­யின் சொல் கேட்டு சீன­மொ­ழி­யைக் கற்­றுக்­கொண்­ட­தால் அவ­ரால் தமிழ்­மொழி அவ்­வ­ளவு சர­ள­மா­கப் பேச முடி­யா­மல் போனது.

தமது பாட்­டி­யு­டன் தமி­ழில் உரை­யாட சிர­ம­மாக இருப்­ப­தாக இவர் கூறி­னார். ஒரு­வேளை தமிழ்­

மொ­ழி­யில் சர­ள­மா­கப் பேச முடிந்­தால் அவர்­க­ளது பந்­தம் இன்­னும் நெருக்­க­மா­ன­தாக இருந்­தி­ருக்­குமோ எனச் சில சம­யங்­களில் சரண்யா எண்­ணி­ய­தும் உண்டு.

சீன உணவு வாங்­கும்­போது அவ­ரு­டைய சீன­மொ­ழித் திற­னைக் கண்டு பலர் வியந்த தரு­ணங்­களும் உண்டு. பார்ப்­ப­தற்கு இந்­தி­யர், ஆனால் பேசு­வது சீன­மொழி என்று நினைக்­கும்­போது அவ­ரு­டைய அடை­யா­ளம் என்­ன­வென்று குழப்பமடைந்தார் சரண்யா.

இந்­தி­யர்­க­ளி­டையே ஓர் அந்­நி­ய­ராக கரு­தப்­பட்­டார், தம் சொந்த சமு­தா­யத்­தில் பாகு­பாட்­டினை அனு­ப­வித்­தார்.

ஆனால், பல்­க­லைக்­க­ழ­கத்­தில் வர­லாற்றுப் பாடம் படித்த இவர், இந்­தி­யர்­க­ளின் வர­லாற்­றி­னைக் கற்­றுக்­கொண்­ட­போது சிங்­கப்­பூ­ரி­லும் தென்­கி­ழக்­கா­சி­யா­வி­லும் அவர்­கள் ஆற்­றி­யுள்ள பங்­கி­னைப் பற்றி

அறிந்­து­கொண்­டார்.

மேலும் தம் தந்தை ஏன் அவரை வேறொரு மொழியை கற்­றுக்­கொள்ள வற்­பு­றுத்­தி­னார் என்­ப­தை­யும் புரிந்­து­கொண்­டார். அதன் பின்­னரே, இந்­தி­யப் பாரம்­ப­ரி­யத்தை பெரு­மை­யோடு தமது நெஞ்­சில் சுமந்­து­கொண்டு தமது அடை­யா­ளத்தை எண்ணி சங்­க­டப்­ப­டு­வ­தற்கு கார­ணமே இல்லை என்­பதை உணர்ந்­தார்.

'அவேர்' சங்­கத்­தின் ஆய்வு தலை­வ­ரான ஷெய்லி ஹிங்­கொ­ரா­ணி­யும் மூத்த திட்ட நிர்­வாகி, வர்ஷா சிவ­ரா­மும் இணைந்து இந்த நூலி­லுள்ள கதை­க­ளைத் தொகுத்­துள்­ள­னர்.

ஆண், பெண் சமத்­து­வத்தை வலி­யு­றுத்­தும் வர்ஷா, 25, இந்த நூலை அவர் தொகுக்­கும்­போது கொவிட்-19 டெல்டா கிருமி வகை பர­வத் தொடங்­கிய கால­கட்­டம் என்­றார். அப்­போது இந்­தி­யர்­களை இழி­வாகப் பேசும் சம்ப­வங்­களும் அவர்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­

க­ளை­யும் பற்றி கேள்­விப்­பட்­ட­தாக கூறி­யி­ருந்­தார்.

இவ்­வாறு மற்­ற­வர்­கள் இந்­தி­யர்­க­ளைப் போது­மான ஆதா­ர­மில்­லா­மல் தவ­றாக குற்­றஞ்­சாட்­டு­வதை ஒழிக்க இந்­தி­யர்­க­ளின் அனு­ப­வங்­களை அவர்­க­ளு­டைய சொந்தப் பார்­வை­யில் எழுதி முறை­யாக வெளி­யி­டு­வது அவ­சி­யம் என்று உணர்ந்­தார்.

இந்­தி­யா­விலி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு குடி­யேற வந்த வர்­ஷா­வின் பெற்­றோர் அவரை வளர்த்த விதம் சிங்­கப்­பூ­ரில் வள­ரும் பிள்­ளை­க­ளோடு ஒப்­பி­டு­கை­யில் மாறு­பட்­ட­தாக அமைந்­தது. பள்­ளிக்­குச் சென்­ற­போது 'சிங்­லிஷ்' மொழி, உள்­ளூர் பாரம்­ப­ரிய கூறு­கள் போன்­ற­வற்­றைப் பற்றி அவர் கற்­று­கொள்ள ஆரம்­பித்­தார். ஒரு பக்­கம் அந்­நி­யப்­ப­டுத்­தப்­பட்­டா­லும், இன்­னொரு பக்­கம் புதுக் கலாசா­ரத்­தில் மூழ்­கத் தொடங்­கி­னார்.

சரண்யா, வர்ஷா உட்­பட பல இந்­தி­யர்­க­ளின் தனிப்­பட்ட கதை­க­ளின் மூலம் சிங்­கப்­பூர் இந்­தி­ய­ராக வளர்­வ­தற்கு எல்­லை­யில்லா அர்த்­தங்­களை

கண்­டு­பி­டிக்­க­லாம். எனவே, சிங்கை இந்­தி­யர்­க­ளுக்கு சமர்ப்­ப­ண­மாக இந்த நூல் அமை­கி­றது.

உள்­ளூர் புத்­த­கக் கடை­க­ளி­லும் இணை­யத்­தின் மூல­மும் 'வாட் வி இன்­ஹெ­ரிட் - குரோவிங் அப் இந்­தி­யன்' நூலை வாங்­க­லாம்.

கூடிய விரை­வில் இந்தப் புத்தகத்தில் உள்ள கதை­களும் இதில் இடம்­பெ­றாத மற்ற சில இந்­தி­யர்­க­ளின் கதை­களும் புதி­யதோர் இணை­யப்­பக்­கத்­தில் வெளி­யி­டப்­பட இருக்­கின்­றன. இப்­பக்­கத்­தில் இந்­திய பெண்­கள் தொடர்பான இலக்­கி­யத் தக­வல்­களும் சேர்க்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!