திரும்பிய பக்கமெல்லாம் உணவு; சாதித்தது லிட்டில் இந்தியா விழா

லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தில் முதன்­மு­றை­யாக பர்ச் சாலை­யில் நேற்று நடத்­தப்­பட்ட மாபெ­ரும் உணவு விழா சிங்­கப்­பூர் சாத­னைப் புத்­த­கத்­தில் இடம்­பெற்­றுள்­ளது.

பல­வித சுவை­யான தின்­பண்­டங்­களை ஆக அதி­க­மான அமைப்­பு­கள் ஒரே இடத்­தில் ஒன்­று­கூடி விநி­யோ­கம் செய்­தது இங்கு நிகழ்த்­தப்­பட்ட சாதனை.

லிஷா­வின் 'மெகா ஃபிங்கர் ஃபூட் ஃபியெஸ்டா' என்­னும் தின்­பண்ட விழா­வில் 100 அமைப்­பு­கள் கலந்­து­கொண்­டன.

ஒவ்­வோர் அமைப்­பும் வெவ்­வேறு தின்­பண்ட வகை­களை வர­வ­ழைக்க வேண்­டி­யி­ருந்­தது. சிலர் புது­மை­யான விதங்­க­ளி­லும் உண­வைத் தயா­ரித்து வந்­தி­ருந்­த­னர்.

பிற்­ப­கல் மூன்று மணியளவில் திர­ளாக வந்­தி­ருந்த மக்­கள், பல்வேறு உணவு வகைகளை ருசி பார்த்­த­னர். இங்கு தயா­ரிக்­கப்­பட்ட அனைத்து பண்­டங்­களும் மாலை 4.30 மணிக்கே தீர்ந்­து­விட்­டன.

விழா­விற்கு சிறப்பு வரு­கை­அளித்த நிதி, போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட், தின்­பண்ட வகை­களை முகம் மலர ருசித்­துப் பார்த்­தார்.

மேடை­யில் சிறப்பு உரை­யாற்­றி­ய­போது, உணவு, மக்­களை ஒன்­றி­ணைக்­கும் சக்தி வாய்ந்த ஒன்று என்று அவர் கூறி­னார். இந்­திய உணவு மட்­டு­மல்­லா­மல் மற்ற நாடு

களைச் சேர்ந்த உண­வும் இங்கு இடம்­பெற்­றது இவ்­வி­ழா­வின் சிறப்பு அம்­ச­மாக அமைந்­தது என்று அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

"லிட்­டில் இந்­தி­யா­வில் மக்­களை இந்­தி­யா­வோடு தொடர்­புப்­ப­டுத்­தக்­கூ­டிய பல்­வேறு பொருள்­கள் மட்டு­ மல்­லா­மல் சிங்­கப்­பூ­ரி­லேயே ஆகச் சிறந்த இந்­திய பாரம்­ப­ரிய உண­

வ­கங்­க­ளை­யும் காண­லாம். நான் என் குடும்­பத்­தா­ரு­டன் இங்கு வந்து இந்­திய கலா­சா­ரத்தை அனு­ப­விக்க ஆவ­லு­டன் உள்­ளேன்," என்­றார் திரு சீ.

சிங்­கப்­பூர் இந்­தி­யர் சங்­கம், செட்டி மலாக்கா சங்­கம், துருக்கி தூத­ர­கம் என பல்­வேறு அமைப்­பு­ கள் மட்­டு­மல்­லா­மல் உண­வ­கங்­களும் வீட்­டில் உணவு தயா­ரித்து விற்­போ­ரும் சுவை­மிக்க பல்­வேறு தின்­பண்ட வகை­க­ளைத் தயா­ரித்­த­னர்.

நண்டு கொஃப்தா­வும் இறால் தந்­தூரி போப்­பி­யா­வும் செய்­தி­ருந்­தது 'அங்­கிள் மகேன் இந்­தியன் ஃபியூஷன்' உண­வ­கம்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு கடலுணவு என்­றால் கொள்ளை ஆசை என்று நம்­பும் இவ்­வு­ண­வ­கத்­தின் உரி­மை­யா­ளர் தமிழ்­செல்வி, 41, "ஃபியூ ஷன் உணவை மக்கள் விரும்பி சாப்­பி­டு­வார்­கள் என்பதால் மண­

ம­ணக்­கும் இவ்­விரு உணவு வகை­களை அறி­மு­கம் செய்­துள்­ளோம்," என்­றார்.

சிங்­கப்­பூர் இந்­தி­யர் சங்­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள், வாயில் உரு­கும் பாலாடை கலந்த கோழி உணவு உருண்­டை­களை தயா­ரித்து விநி­யோ­கம் செய்­த­னர்.

"நாங்­கள் இம்­மா­தி­ரி­யான உணவு விழா­வில் கலந்­து­கொள்­வது இது இரண்­டா­வது முறை. லிஷா 2019ஆம் ஆண்­டில் ஏற்­பாடு செய்­தி­ருந்த கறி விழா­வில் கலந்து­ கொண்­ட­போது பெர்னாக்கன் இறைச்சி கறியை தயார் செய்­தோம்," என்­றார் இச்­சங்­கத்­தைச் சேர்ந்த விஜயா சிகா­மணி, 50.

'எஸ்­ஜி­பி­ரி­யா­ணி­கேக்ஸ்' என்­னும் பிரி­யா­ணி­க­ளைக் கொண்டு கேக் செய்­யும் வணி­கத்தைக் கடந்த ஏழு ஆண்­டு­க­ளாக நடத்தி வரு­கின்­ற­னர் மாயா ஜெக­தே­வ­னின் குடும்­பத்­தார்.

ஒவ்­வொரு வார இறு­தி­யிலும் சுமார் மூன்­றி­லி­ருந்து ஐந்து பிரி­யாணி கேக்­கு­களை செய்­யும் இவர்­கள், நேற்­றைய தின்­பண்ட விழா­வில் சிறு சிறு அலு­மி­னி­யத்­தால் செய்­யப்­பட்ட கிண்­ணங்­களில் பிரி­யாணி கேக்­கு­களை பரி­மா­றி­னர்.

மூன்று ஆண்­டு­க­ளாக வீட்­டில் '50-பிப்­டீஸ்' என்­னும் பல­கா­ரங்­கள் தயா­ரிக்­கும் வணி­கத்தை நடத்தி வரும் வனஜா சுப்­பி­ர­ம­ணி­யம், 52, தீபா­வளி, நோன்­புப் பெரு­நாள், கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்ட காலங்­களில் மக்­கள் தம்­மி­டம் நிறைய பல­கா­ரங்­களை வாங்­கு­வர் என்­றார். இவ்­வி­ழா­வில் அவர் 150 குட்டி பூரி­க­ளை­யும் 70 நட்­டெல்லா டார்ட்ஸ்­க­ளை­யும் தயார் செய்­தார்.

இவ்­வாறு பொது­மக்­கள் சுவைத்துப் பார்ப்­ப­தற்கு ஏரா­ள­மான, சுவையான தின்­பண்ட வகை­களை வர­வ­ழைத்­தன இங்குள்ள 100 அமைப்­பு­கள்.

லிஷா­வின் பெண்­கள் கூட்­ட­ணி­யின் முயற்­சி­யா­லும் லிஷா­வின் ஆத­ர­வா­ளர்­க­ளா­லும்­தான் இந்த அமைப்­பு­கள் ஒன்­று­கூ­டு­வது சாத்தி ­ யா­மா­கி­யுள்­ளது. தொட­ர்ந்து ஒவ்­வோர் ஆண்­டும் இம்­மா­தி­ரி­யான உணவு விழாக்­களை நடத்த லிஷா உற்­சா­க­மா­க­வுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!