‘மனமிருந்தால் நிச்சயம் மார்க்கமுண்டு’

சிங்­கப்­பூ­ரி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் விலங்­குப் பயிற்­சி­யா­ள­ரா­க பல­ ஆண்டுகள் பணி­யாற்­றிய அனு­ப­வம் உடை­ய­வர் 48 வய­தா­கும் திரு ச. அரு­ண­கிரி.

துருக்கி விலங்­கி­யல் தோட்­டத்­தில் பணி­யாற்­றிக் கொண்­டி­ருந்த இவர் விடு­மு­றை­யில் சிங்­கப்­பூ­ருக்கு வந்த நேரத்­தில், கொவிட்-19 கிருமிப்­ப­ர­வலை முன்­னிட்டு எல்­லை­கள் மூடப்­பட்­டன. சிங்­கப்­பூரி­லேயே தங்க நேரிட்­ட­தால், அரு­ண­கி­ரி­யின் வேலை பறி­போ­னது. மனம் தள­ரா­மல் புதிய துறை­யில் வேலை தேடிக்­கொண்ட அனு­ப­வத்­தைப் பகிர்ந்­து­கொண்­டார் இவர்.

ஜெ&டி எக்ஸ்­பி­ரஸ் எனும் தள­வாட நிறு­வ­னத்­தில் பகு­தி­நேர ஊழி­ய­ரா­கச் சேர்ந்த இவர், தற்­போது ஏறக்­கு­றைய 200 ஊழி­யர்­க­ளைக் கொண்ட அமைப்­பில், உதவி மேலா­ள­ராக உயர்ந்­துள்­ளார்.

விலங்­கு­கள்­மேல் அன்பு கொண்ட அரு­ண­கிரி, 23 ஆண்டு களாக சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டத்­தில் பணி­பு­ரிந்­தார். விலங்குப் பரா­ம­ரிப்­புத் துறை­யில் மேலும் அனு­ப­வம் பெற வியட்­னா­மிற்­குச் சென்­றார். அங்­கி­ருந்து துருக்கி சென்று, அந்­நாட்டு விலங்­கி­யல் தோட்­டத்­தில் மற்ற விலங்­குப் பயிற்­சி­யா­ளர்­க­ளுக்­குப் பயிற்சி அ­ளித்­த­தோடு விலங்­கு­க­ளைக் கொண்டு நடத்­தப்­படும் நிகழ்ச்­சி­களை­யும் படைத்­தார்.

SPH Brightcove Video

ஐந்­தாண்டு வெளி­நாட்­டுப் பணி வாழ்க்கை கிரு­மிப்­ப­ர­வ­லால் முடி­வுக்­கு­வந்த நேரத்­தில், பெற்­றோ­ரு­டன் வசிக்­கும் அரு­ண­கி­ரிக்­குத் தன் குடும்­பத்­தைப் பரா­ம­ரிக்க வரு­மா­னம் தேவை­யாக இருந்­தது.

சில மாதங்கள் மேற்கொண்ட கடின முயற்­சிக்­குப் பிறகே ஜெ&டி எக்ஸ்­பி­ரஸ் தள­வாட நிறு­வ­னத்­தில் தனக்குப் பகு­தி­நேர ஊழி­யர் பணி கிடைத்­த­தாகக் கூறி­னார். தொடக்­கத்­தில் இவர், தள­வா­டத் துறை­யில் பல சவால்­க­ளைச் சந்­திக்க நேர்ந்­தது. விலங்­கு­க­ளைப் பரா­ம­ரித்து வந்த இவர், உயர் தொழில்­நுட்ப இயந்­தி­ரங்­க­ளைக் கையா­ளச் சிர­மப்­பட்­டார்.

ஏறக்­கு­றைய 30 ஆண்­டு­க­ளாக வெளிப்­பு­றங்­களில் அதி­கம் வேலை செய்த இவ­ருக்கு, புதிய வேலை­யில் உட்­பு­றத்­தி­லேயே செயல்­பட வேண்­டி­யி­ருந்­தது.

நிறு­வன இயக்­கு­நர், சக ஊழி­யர்­கள், குடும்­பத்­தி­னர், நண்­பர்­கள் ஆகி­யோ­ரின் ஊக்­கத்­தி­னால் மனம் தள­ரா­மல் பணி­யைத் தொடர்ந்த அரு­ண­கிரி, இரண்­டரை ஆண்டு காலத்­தில் தன் திறன்­களை வளர்த்­துக்­கொண்டு பதவி உயர்வு பெற்­றார்.

“நடுத்­தர வய­தில் பணி­யிடை மாற்­றம் செய்ய விரும்­பு­ப­வர்­கள், திறந்த மனத்­தோடு இருக்­க­வேண்­டும். எதை­யும் கற்­கும் மனம் இருந்­தால் எந்­தத் துறை­யி­லும் நம்­மால் சிறந்து விளங்க முடி­யும்,” என்ற அரு­ண­கிரி, இத்துறை­யில் புதிய அனு­ப­வங்­க­ளை­யும் திறன்­க­ளை­யும் பெற முனைந்­துள்­ளார். மனம் தள­ரா­மல் முய­லும் யாரும் நிச்­ச­யம் வெற்­றி­பெ­ற­லாம் என்றார் இவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!