மளிகைப் பொருள் உதவித் திட்டத்துக்கு மகத்தான ஆதரவு

ஹாலந்து-புக்­கிட் தீமா குழுத்­தொகுதி, புக்­கிட் பாஞ்­சாங் தனித்­தொ­குதி ஆகி­ய­வற்­றின் அடித்­தள ஆலோ­ச­கர்­கள் இணைந்து சென்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி மளி­கைப் பொருள் சமூக உத­வித் திட்­டத்­தைத் தொடங்­கி­னர்.

பல்­பொ­ருள் அங்­கா­டிப் பற்­றுச்­சீட்­டு­கள் மூலம் 640 வச­தி­கு­றைந்த குடும்­பங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க, $128,000 திரட்­டு­வது இத்­திட்­டத்­தின் இலக்கு.

சென்ற மாதம் 24ஆம் தேதி நில­வ­ரப்­படி, 177,000 வெள்ளி திரட்­டப்­பட்­டி­ருப்­ப­தாக புக்­கிட் தீமா தொகுதி அலு­வ­ல­கம் தெரி­வித்­தது. இந்­தத் தொகை நிர்­ண­யிக்­கப்­பட்ட இலக்­கைக் காட்­டி­லும் 38 விழுக்­காடு அதி­கம்.

திரட்­டப்­பட்ட கூடு­தல் நிதி, மேலும் 245 குடும்­பங்­க­ளுக்கு உதவ வகை­செய்­யும் என்று கூறப்­பட்­டது.

திட்­டத்­தின்­கீழ், தொடக்­க­மாக 100 வச­தி­கு­றைந்த குடும்­பங்­க­ளுக்கு பல்­பொ­ருள் அங்­கா­டிப் பற்­றுச்­சீட்­டு­களை வழங்­கும் நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

நிகழ்ச்சி இம்­மா­தம் 2ஆம் தேதி பிற்­ப­கல் 2.15 மணி முதல் மாலை 4 மணி வரை ஸெங்ஹுவா சமூக மன்­றத்­தில் நடை­பெற்­றது.

இதில் ஹாலந்து-புக்­கிட் தீமா குழுத்­தொ­குதி, புக்­கிட் பாஞ்­சாங் தனித்­தொ­குதி ஆகி­ய­வற்­றின் அடித்­தள ஆலோ­ச­கர்­க­ளான டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், திரு­வாட்டி சிம் ஆன், திரு எட்­வர்ட் சியா, திரு லியாங் எங் ஹுவா ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர்.

நன்­கொ­டை­யா­ளர்­க­ளின் தாராள மனப்­பான்மை நெகிழ வைப்­ப­தா­க­வும் திரட்­டப்­படும் ஒவ்­வொரு வெள்­ளி­யும் பல­ன­டை­யும் குடும்­பங்­க­ளின் வாழ்க்­கை­யைச் சிறப்­பாக மாற்ற உத­வும் என்றும் வெளி­யு­றவு அமைச்­ச­ரு­மான டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் கூறி­னார்.

"சமூ­கத்­தி­ட­மி­ருந்து சமூ­கத்­திற்­காக நிதி திரட்­டும் இம்­மு­யற்சி கோத்தோங் ரோயோங் உணர்­வைச் சித்­தி­ரிக்­கிறது.

"அடித்­த­ளத்­தி­லி­ருந்து சமூகத்தின் வள்­ளல் தன்­மையை ஊக்­கு­விக்­கும் இந்த அனு­ப­வம் அடித்­தள அமைப்­பு­க­ளுக்கு மன­நி­றை­வ­ளிக்­கிறது," என்று கூறி­னார் வெளி­யு­றவு, தேசிய வளர்ச்சி அமைச்­சு­க­ளுக்­கான மூத்த துணை அ­மைச்­ச­ரு­மான திரு­வாட்டி சிம் ஆன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!