கண்ணதாசன் விருது பெற்றார் சுபாஷினி கலைக்கண்ணன்

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் ஆண்டுதோறும் வழங்­கி­வரும் கவி­ய­ரசு கண்­ண­தா­சன் விருது இவ்­வாண்டு எழுத்­தா­ளர், கவி­ஞர், பாட­லா­சி­ரி­யர் சுபா­ஷினி கலைக்­கண்­ண­னுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கிறது.

நவம்­பர் 19ஆம் தேதி தேசிய நூல­கக் கட்­ட­டத்­தி­லுள்ள டிராமா சென்­ட­ரில் நடை­பெற்ற விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்சு, சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு ஆகி­ய­வற்­றுக்­கான மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் எரிக் சுவா அவ்­வி­ரு­தினை திரு­வாட்டி சுபா­ஷி­னிக்கு வழங்­கி­னார்.

திரு சுவா தமது உரை­யில் சிங்­கப்­பூ­ரில் நமது கலை­யும் மர­பும் பல்­வேறு வகை­யா­க­வும் துடிப்­பு­ட­னும் இருப்­ப­தா­கக் கூறி­னார். அந்த வகை­யில் உல­கின் வெகு சில பல­மொழி இலக்­கிய விழாக்­களில் ஒன்­றான சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழா­வு­டன் இவ்­வாண்டு கவி­ய­ரசு கண்­ண­தா­சன் விழா படைக்­கப்­ப­டு­வது சிறப்­புக்­கு­ரி­யது என்­றும் கூறி­னார் திரு சுவா.

தமி­ழ­கத்­தி­லி­ருந்து வருகை தந்­தி­ருந்த இசைக்­கவி இர­ம­ணன், கவி­ய­ர­ச­ரின் திரைப் பாடல்­களில் இலக்­கிய நயம் எனும் தலைப்­பில் உரை­யாற்­றி­னார்.

எழுத்­தா­ளர் கழ­கத்­தின் முன்னாள் தலை­வர் அம­ரர் சுப. அரு­ணா­ச­லம் நினை­வாக நடத்­தப்­பட்ட சூழ­லுக்­குப் பாடல் எழு­தும் போட்­டி­யில் சீர்­காழி திரு செல்­வ­ராஜ் முதல் பரிசு பெற்­றார்.

நமது சுற்­றுச்சூலுக்­குத் தற்­போது பல்­வேறு வகை­களில் அச்­சு­றுத்­தல் ஏற்­பட்­டுள்­ளது. அத­னால் சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்பையும் அதன் முக்­கி­யத்­து­வத்­தை­யும் வலி­யு­றுத்­திப் பாடல் வரி­கள் வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­ளப்­பட்­டது. முதல் பரிசு பெற்ற பாடல் இசை­ய­மைக்­கப்­பட்டு விழா­வில் ஒலி­யேற்­றப்­பட்­டது.

கவி­ய­ரசு கண்­ண­தா­சன் பாட்­டுத் திறன் போட்­டி­யில் 14 வய­திற்­குக் கீழான பிரி­வில் முதல் பரிசை வென்­றார் ஆதார்ஷ் அக்னி. 14 வய­திற்கு மேற்பட்டோர் பிரி­வில் கிருஷ்­ண­மூர்த்தி ஸ்ரீநி­வா­சன் முதல் பரி­சைத் தட்­டிச் சென்­றார்.

முன்­ன­தாக திரு­வாட்டி பாரதி முரளி, கவி­ய­ர­சர் எழு­திய தமிழ் வாழ்த்­துப் பாட­லைப் பாடி விழா­வைத் தொடங்கி வைத்­தார். அடுத்து திரு­வாட்டி தேவி நடத்­தும் சக்தி நுண்­க­லைக்­க­ழக மாண­வி­கள் திரு­வ­ருட்­செல்­வர் படத்­தில் கவி­ய­ர­சர் எழு­திய மன்­ன­வன் வந்­தா­னடி பாட­லுக்கு நடனம் ஆடினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!