குடும்ப தினம்

குடும்பங்களின் ஒன்றுகூடலை ஊக்குவிக்கவும் குடும்பப் பிணைப்பை வலுவாக்கவும் குடும்ப தினத்திற்கு சிங்கப்பூர் கடைய நல்லூர் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாண்டின் குடும்ப தினம் 'பே ஈஸ்ட் கார்டன்'ல் இம்மாதம் 17ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி யிலிருந்து மாலை 4 மணி வரை நடைபெறும்.

ஈராண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தக் குடும்ப தினத்தில், மேடை நிகழ்ச்சி கள், கேளிக்கை நடவடிக்கை கள், அதிர்ஷ்டக் குலுக்கு, விளையாட்டுகள் எனப் பல தரப்பட்ட அங்கங்கள் இடம் பெறும். வருகையாளர்களுக்கு மதிய உணவும் அன்பளிப்புப் பைகளும் வழங்கப்படும். குடும்ப தினத்திற்கு நுழைவுக் கட்டணம் $15. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்ல இலவசப் பேருந்து களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நுழைவுச் சீட்டு களுக்கும் மேல் விவரங் களுக்கும் 88213576 என்ற எண்ணில் தொடர்புகொள்ள லாம்.

வசதிகுறைந்தவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பினால், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்-ஐ அணுகலாம். அவர் களுக்குத் தகுந்த உதவி வழங்கப்படும் என்று தலைவர் திரு நசீர் கனி குறிப்பிட்டார். இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் தமிழ்மொழி புழக்கம் அதி கரிப்பதோடு இந்திய கலா சாரத்தையும் வளர்க்கலாம். சமுதாய வளர்ச்சி தொடர, குடும்பங்களுக்கு இடையே இடைவெளி நீங்க வேண்டும் என்று கூறும் திரு கனி, அனைவரையும் குடும்ப தினத்தில் கலந்துகொள்ள அழைக்கிறார். செய்தி: பொன்மணி உதயகுமார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!