மகிழ்வூட்டும் கற்றல் அவசியம்

சிங்­கப்­பூர் எம்­ஆர்டி ரயில் பாதை­ க­ளி­லுள்ள 170 நிலை­யங்­க­ளின் பெய­ர்களை­யும் 12 நிமிடங்களில் ஒப்­பு­வித்து சிங்­கப்­பூர் சாதனை புத்­த­கத்­தில் இடம்­பி­டித்­துள்­ளார் சஸ்­திக் வேல் விவேக். எம்ஆர்டி, எல்ஆர்டி ரயில் பாதை­களில் உள்ள அனைத்து நிலை­யங்­களின் பெய­ர்களை­யும் நிலை­யக் குறி­யீட்­டு­டன் சொல்லி அசத்­து­கி­றார் இந்த பாலர் பள்ளி மாண­வர்.

கடந்த டிசம்­பர் மாதம் 30ஆம் தேதி இச்சாத­னையை நிகழ்த்­தி­ய­போது சஸ்­திக்­கிற்கு ஐந்து வயது ஐந்து மாதங்­கள்­தான். இவ­ருக்கு எட்டு வய­தில் லக்­‌ஷைன் வேல் விவேக் என்ற அண்ணனும் ஐந்து வய­தில் சாத்­விகா ஸ்ரீ விவேக் என்ற இரட்­டைச் சகோ­த­ரி­யும் உள்­ள­னர்.

“சஸ்­திக்­கி­டம் பிறந்­தது முதலே கூர்ந்து கவ­னிக்­கும் திறன் அதி­க­மாக இருந்­தது. வீட்­டில் இருந்­தா­லும் வெளியே சென்­றா­லும் தன்­னைச் சுற்றி நடக்­கும் சம்­ப­வங்­க­ளை­யும் கிடைக்­கப்­பெ­றும் தக­வல்­க­ளை­யும் இயல்­பா­கவே நினை­வில் வைத்­துக்­கொள்­வார். மறு­முறை அதைப்­பற்றி பேசும்­போது மிகத் துல்­லி­ய­மா­கத் தானே தக­வல்­களைப் பகிர்ந்­து­கொண்டு எங்­க­ளைப் பல­முறை ஆச்­ச­ரி­யத்­தில் ஆழ்த்தி இருக்­கி­றார்,” என்று கூறி­னார் எம்ஆர்டி நிறு­வ­னத்­தில் பொறி­யா­ள­ராகப் பணி­பு­ரி­யும் சஸ்­திக்­கின் தந்தை விவேக் செல்­வம், 37.

SPH Brightcove Video

சாரதா பாலர் பள்­ளி­யில் இரண்­டாம் ஆண்டு மாண­வரான ­சஸ்­திக்­கிற்கு ரயில் பய­ணம் மிக­வும் பிடித்­த­மான ஒன்று. அதி­லும் தந்தை அத்­துறை­யில் பணி­பு­ரி­வ­தால் ரயில் போக்­கு­வ­ரத்து தொடர்­பான பல்­வேறு தக­வல்­களை அவ்­வப்­போது கேட்­டுத் தெரிந்­து­கொள்­வது சஸ்­திக்­கின் வழக்­கம். ஒரு முறை படித்­து­விட்­டால் அல்­லது பார்த்­து­விட்­டாலே அதை வெகு இயல்­பாக நினை­வில் வைத்­துக்­கொள்­வார்.

“சஸ்­திக் பேச ஆரம்­பித்­த­திலி­ருந்து எங்­கா­வது நாங்­கள் வெளி­யில் கிளம்­பி­னால் ரயி­லில் செல்ல வேண்­டும் என்று அடம்­பி­டிப்­பார். நாங்­கள் செல்ல வேண்­டிய இடத்­திற்கு எப்­படிச் செல்ல­லாம் என்ற கலந்­து­ரை­யா­ட­லி­லும் ஆர்­வ­மா­கப் பங்­கெடுப்­பார்,” என்று கூறி­னார் இவரின் ­தாயா­ரும் இல்­லத்­த­ர­சி­யு­மான திவ்யா அரு­ணாச்­ச­லம், 35.

தன்­னு­டைய வீட்­டி­லி­ருந்து பள்­ளிக்கு ரயி­லில் செல்­லும்­போது ரயில் பாதை வரை­ப­டத்­தின் அரு­கில் இருக்­கும் இருக்­கை­யில் அமர்ந்­து­கொண்டு அதைத் தின­மும் படித்­துக்­கொண்டே வரு­வார் சஸ்­திக்.

“சில மாதங்­க­ளுக்கு முன் குடும்­பத்­து­டன் நாங்­கள் பேஃபிரண்ட் பகு­திக்கு அவ­ச­ர­மா­கச் செல்ல வேண்­டி­யி­ருந்­தது. பர­ப­ரப்­பாக நாங்­கள் எவ்­வ­ழி­யில் செல்­ல­லாம் என்று பேசிக்­கொண்­டி­ருந்­த­போது எளி­மை­யா­க­வும் மிக விரை­வா­க­வும் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய ரயில் பாதையை சஸ்­திக் தாம­திக்­கா­மல் கூறி­யது எங்­க­ளுக்கு வியப்பை அளித்­தது,” என்று நினை­வு­கூர்ந்­தார் திவ்யா.

இச்­சம்­ப­வத்­திற்­குப் பின்­னரே இந்­தச் சாத­னைப் புத்­த­கத்­தில் இடம்­பெற அவ­ரின் பெய­ரைப் பதி­வு­செய்­ய­லாம் என்ற எண்­ணம் தோன்­றி­ய­தா­க­வும் கூறி­னார். சஸ்­திக் கூறும் வழியை கூகல் வரை­ப­ட­மும் பெரும்­பாலான நேரங்­களில் பரிந்­துரைப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தன்­னு­டைய அண்­ண­னி­ட­மிருந்­தும் பல­வற்­றைக் கற்­றுக்­கொள்­ளும் சஸ்­திக், 2021ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் ‘இந்­தியா புக் ஆப் ரெக்­கார்­டஸ்’ புத்­த­கத்­தில் இடம்­பெற்­றி­ருந்­தார். 100 பொது அறிவு கேள்­வி­க­ளுக்­குச் சரி­யான பதில் அளித்­த­தற்­காக இவர் இந்­தப் புத்­த­கத்­தில் இடம்­பெற்­றார்.

சஸ்­திக் பெரும்­பான்­மை­யான நாடு­க­ளின் பெயர்­க­ளை­யும் அந்­நா­டு­கள் அமைந்­துள்ள பகு­தி­களை­யும் அவற்­றின் தலை­ந­க­ரங்­க­ளை­யும் நினை­வில் வைத்து அசத்­து­கி­றார்.

இவர்­க­ளின் வீடு விளை­யாட்­டுப் பொருள்­க­ளா­லும் வரை­படங்­க­ளா­லும் அலங்­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. தங்­க­ளு­டைய பிள்­ளை­க­ளுக்­குத் தொலைக்­காட்சி, கைப்­பேசி போன்ற தொழில்­நுட்­பச் சாத­னங்­க­ளைத் தரு­வ­தைத் தவிர்க்­கின்­ற­னர் பெற்­றோர். முடிந்­த­வரை புத்­த­கங்­க­ளை­யும் அறி­வு­சார்ந்த, பொழு­து­போக்கு விளை­யாட்­டுப் பொருள்­க­ளை­யும் விளை­யா­டத் தரு­கின்­ற­னர்.

“பிள்­ளை­க­ளு­டன் அதிக நேரம் விளை­யா­டு­வ­தும் பேசு­வ­தும் அவர்­க­ளு­டைய உல­கத்­தில் நாம் நுழைய ஏது­வாக இருக்­கும். ஒவ்­வொரு நாளும் பள்­ளிக்­குச் செல்­லும்­போ­தும் பள்­ளி­யி­லி­ருந்து வீட்­டிற்கு வரும்­போ­தும் பிள்­ளை­கள் ஆர்­வத்­து­டன் அதை எதிர்­பார்த்­தி­ருக்க வேண்­டும். அந்த ஆவ­லைத் தூண்­டு­வது பெற்­றோ­ரின் கடமை என்றே கரு­து­கி­றோம்,” என்­றார் திவ்யா.

“கற்­ற­லைத் திணிக்க முடி­யாது; அத­னால் பய­னும் இல்லை. மாறாக பிள்­ளை­க­ளின் புத்­தாக்­கச் சிந்­த­னை­யைக் கட்­டுப்­படுத்தி அவர்­க­ளின் ஆர்­வத்­தைக் குலைத்­து­வி­டும். எந்­த­வொரு கற்­றல் வழி­முறை­யும் மகிழ்ச்­சி­யா­ன­தாக பிள்­ளை­களின் ஆர்­வத்­தைத் தூண்­டக்­கூடி­ய­தாக இருக்­க­வேண்­டும் என்­ப­தில் பெற்­றோர் என்ற முறை­யில் உறு­தி­யாக இருக்­கி­றோம். அறிவை வளர்க்க வேண்­டும் என்­ப­தற்­காக பிள்­ளை­க­ளுக்­குப் பிடிக்­காத ஒன்றை நாங்­கள் திணிப்­ப­தில்லை,” என்று கூறி­னார் சஸ்­திக்­கின் தந்தை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!