‘புது வாழ்வு தொடங்கக் காத்திருக்கிறோம்’

ஆ. விஷ்ணு வர்­தினி

சிறை­யில் அடை­பட்­டி­ருந்த நிலை­யி­லும் திரு சிவா (உண்­மைப் பெய­ரல்ல), தமது சாதா­ரண நிலைத் தேர்­வில் 11 புள்­ளி­க­ளு­டன் சிறப்­புத் தேர்ச்சி பெற்­றுள்­ளார். கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக தானா மேரா சிறைச்­சா­லை­யில் இருக்­கும் இவர், சிறைக்கு வரு­வது இது ஐந்­தா­வது முறை. ஆனால் இதுவே கடைசி முறை என்று அவர் உறு­தி­யெ­டுத்­துள்­ளார்.

கடந்த மார்ச் மாதத்­தில் ‘ஓ’ நிலைத் தேர்­வுக்­காக ஆயத்­த­மாகத் தொடங்­கி­ய­போ­து­தான், கல்­வி­யில் தாம் பெரி­தும் பின்­தங்­கி­யி­ருந்­ததை உணர்ந்­தார் 37 வயது சிவா. 22 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் உயர்­நிலை இரண்­டில் அவர் படிப்பை நிறுத்­தி­யதை அடுத்து மீண்­டும் கடந்த ஆண்டு சிறை­யில் வகுப்பு நேரத்­திற்கு அப்­பால் வார இறு­தி­க­ளி­லும் சிரத்தை எடுத்­துப் படிக்­கத் தொடங்­கி­னார்.

“என் நேரத்தை அர்த்­த­முள்ள வழி­யில் செல­வி­டு­கி­றேன் என்று நினைத்து எனக்கே நான் ஊக்­க­ம­ளித்­துக்­கொண்­டேன்,” என்­றார், வணி­கத் துறை­யில் பட்­ட­யப் படிப்­பைத் தற்­போது சிறை­யில் மேற்­கொண்டு வரும் சிவா.

தம்பி கிருஷ்ணா, அம்மா கலை (உண்­மைப் பெயர்­கள் அல்ல) ஆகிய இரு­வ­ருக்­கா­க­வும் இத்­தேர்ச்­சியை அர்ப்­ப­ணிப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

போதை­யர் மறு­வாழ்வு நிலை­யத்­தில் ஈராண்­டு­க­ளாக இருக்­கும் தம்பி கிருஷ்­ணா­வுக்கு, சிவா­வின் தேர்ச்சி பெரும் ஊக்­கு­விப்­பாக அமைந்­துள்­ளது. மூன்­றாவது முறை­யாக பிடி­பட்­டுள்ள கிருஷ்ணா, தம் வழக்­க­நி­லைத் தேர்வை மீண்­டும் 2018ல் சிறைப் பள்­ளி­யின் மூலம் எழு­தித் தேர்ச்சி பெற்­றி­ருந்­தார்.

“அண்­ணன் தமது சுய மேம்­பாட்­டுக்­காக முயற்சி எடுப்­ப­தைப் பார்த்து பெரு­மைப்­ப­டு­கி­றேன். இரு­வ­ரும் இனி திருந்தி வாழவே ஆசைப்­ப­டு­கி­றோம்,” என்­றார் 32 வயது கிருஷ்ணா. தம் வாழ்க்­கை­யில் பத்­தாண்­டு­களை விர­ய­மாக்­கி­ய­தை­யும் சேமிப்பு எது­வும் இல்­லாத நிலை­யை­யும் எண்­ணிக் கவ­லைப்­ப­டு­வ­தாக அவர் கூறி­னார்.

மாதம் இரு­முறை இரு­வ­ரை­யும் தவ­றா­மல் சந்­தித்து வரு­கிறார் தாயார் திரு­வாட்டி கலை. 1998ல் கண­வ­ரின் மறை­வுக்­குப் பின்­னர் இரு பிள்­ளை­க­ளை­யும் ஒற்­றைப் பெற்­றோ­ராய் வளர்த்­தார். பகு­தி­நேர வேலை­கள் செய்து பிள்­ளை­க­ளைக் கரை­யேற்ற அவர் முயன்­று­வந்­த­போதும் வேலைப் பளு­வால் பிள்­ளை­க­ளின் நட­வ­டிக்­கை­க­ளைக் கண்­கா­ணிக்க முடி­யா­மல் போனது. 2003ல் முதல்­மு­றை­யாக சிவா பிடி­பட்ட சம­யத்­தில் நிலை­கு­லைந்து போனார் இத்­தா­யார்.

தீய நண்­பர்­க­ளின் நட்பு, போதைப்­பொ­ருள் எனத் தம்­மைப் போலவே தம்பி கிருஷ்­ணா­வும் தவ­றான பாதை­யில் சென்­றது, தமக்கு வருத்­த­ம­ளித்­த­தாக சிவா குறிப்­பிட்­டார்.

சிவா­வைக் குறித்து திரு­வாட்டி கலை கூறு­கை­யில், “இன்று அவர் அடைந்­துள்ள தேர்ச்­சி­நிலை, எனக்­குச் சொல்ல முடி­யாத மகிழ்ச்­சி­யைத் தந்­துள்­ளது,” என்­றார்.

தற்­போது இரு மகன்­கள் மீதும் தமக்கு நம்­பிக்கை ஏற்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

பாதை தவ­றிச் சென்ற இரு­வரும் தங்­கள் வாழ்வை மாற்­றி­யமைத்­துக்­கொள்­ளும் கன­வில் உள்­ள­னர். விடு­த­லைக்­குப் பின் ‘ஹைட்­ரோ­போ­னிக்ஸ்’ எனப்­படும் நீர்­வே­ளாண்மை சார்ந்த வணி­கம் ஒன்­றைச் சொந்­த­மா­கத் தொடங்­க­வும் அம்­மா­வுக்­குத் துணை­யாக இருக்­க­வும் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

இவ்­வர்த்­தக முயற்­சியே இரு­வ­ருக்­கும் நம்­பிக்கை ஊட்­டும் கனவு என்­பதை உணர்ந்­துள்ள திரு­வாட்டி கலை, தம்­மால் ஆன ஆத­ர­வைத் தரக் காத்­தி­ருக்­கிறார்.

அடுத்த ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் விடு­த­லை­யாக உள்­ளார் சிவா. கிட்­டத்­தட்ட 14 ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் இக்­கு­டும்­பம் இணைய உள்­ளது. அத்­த­ரு­ணத்தை எதிர்­பார்த்­துக் காத்­தி­ருப்­ப­தாக திரு கிருஷ்ணா தெரி­வித்­தார். அதோடு தங்­க­ளின் மீது நம்­பிக்கை இழக்­காத தாயா­ரி­டம் இரு மகன்­களும் மன்­னிப்­பும் கோரி­யுள்­ள­னர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!