இணைய மோசடிகளுக்கு எதிராகச் செயல்படும் காவல்துறை அதிகாரி

ரச்­சனா வேலா­யு­தம்

இணைய மோச­டி­கள் அதி­க­ரித்­துள்ள நிலை­யில் அவற்­றுக்கு எதி­ராக இயங்­கக்­கூ­டிய ஒரு செய­லியை உரு­வாக்­கி­ய­து­டன் குற்­றச்­செ­யல்­களில் காணப்­படும் போக்கை ஆராய்ந்­தும் வரு­கி­றார் காவல்­துறை துணைக் கண்­காணிப்­பா­ளர் (டிஎஸ்பி) ஜோஷுவா ஜேசு­தா­சன், 28.

இணைய மோச­டி­களை எவ்­வாறு கண்­ட­றி­ய­லாம், அவற்றை எவ்­வாறு தவிர்க்­க­லாம் என்று மக்­க­ளுக்கு எடுத்­துக்­கூற ‘ஷோப்பீ’ இணைய வர்த்­த­கத் தளத்­தில் ஓர் இணைய விளை­யாட்டை ஜோஷுவா தம் குழு­வுடன் தயா­ரித்­துள்­ளார்.

விளை­யாட்­டில் சரி­யா­கப் பதி­ல­ளிப்­ப­வர்­க­ளுக்கு ஷோப்பீ சலுகை­களும் பற்­றுச்­சீட்­டு­களும் வழங்­கப்­படும். கடந்த அக்­டோ­ப­ரில் தொடங்­கப்­பட்ட இந்­தச் செயலி, இணைய வர்த்­த­கத் தளத்­தில் மோசடி தொடர்­பான கல்­விக்­காக உரு­வாக்­கப்­பட்ட முதல் விளை­யாட்­டுத் திட்­ட­மாகும். தற்­போது தின­மும் சுமார் 11,000 விளை­யாட்­டா­ளர்­கள் இதில் பங்­கேற்று வரு­கின்­ற­னர்.

“மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுப்­ப­தை­விட, விளை­யாட்­டு­வழி அறி­வுரை கூறு­வதே சிறந்த வழி,” என்­றார் ஜோஷுவா.

இன்­றைய தொழில்­நுட்ப யுகத்­தில் மோச­டிக்­கா­ரர்­கள் பல நூதன வழி­களை நாடு­வ­தால் அதற்­கேற்ப காவல்­து­றை­யும் மாற்­றுச் சிந்­த­னை­யு­டன் செயல்­பட வேண்­டும் என்­றார் அவர்.

தொழில்­நுட்ப ஆர்­வ­மு­டைய இளம் தலை­மு­றை­யி­னர், இணைய மோச­டி­க­ளுக்கு எளி­தில் ஆளா­க­லாம் என்­ப­தால் மோசடி தொடர்­பான இந்த ‘ஷோப்பீ’ விளை­யாட்டு, குறிப்­பாக அவர்­க­ளுக்­குப் பய­ன­ளிக்­கும் என்­றார் ஜோஷுவா.

சிறு வய­தில் ஜோஷுவா தம் பெற்­றோ­ரு­டன் தொண்­டூ­ழி­யப் பணி­க­ளுக்­காக பாப்­புவா நியூ கினிக்­குச் சென்­றார். தம் பெற்­றோ­ரைப் போலவே தாமும் மற்­ற­வர்­க­ளுக்கு உதவ வேண்­டும் என்ற நோக்­கத்­தில் காவல்­து­றை­யில் சேர முடிவு செய்­தார்.

அவர் ‘2013 அதி­பர் கல்­வி­மான் உப­கா­ரச் சம்­ப­ளம்’, ‘சிங்­கப்­பூர் காவல்­து­றை­யின் வெளி­நாட்டு உப­கா­ரச் சம்­ப­ளம்’ ஆகி­ய­வற்­றைப் பெற்­றுள்­ளார். ஆக்ஸ்­ஃபர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பட்­டப்­ப­டிப்­பை­யும் லண்­டன் ஸ்கூல் ஆஃப் எக­னா­மிக்­ஸில் முது­க­லைப் படிப்­பை­யும் முடித்­து­விட்டு தற்­போது காவல் துறை­யில் முக்­கி­யப் பதவி வகிக்­கி­றார், ஜோஷுவா.

காவல் துறை­யில் மிக இளம் வய­தி­லேயே சேர்ந்த அவர், தற்­போது குயின்ஸ்­ட­வுன் அக்­கம்­பக்க காவல் நிலை­யத்­தின் மேற்­பார்­வை­யா­ள­ரா­கப் பணி­பு­ரி­கி­றார்.

“இந்­தத் துறை­யில் எல்­லா­ருக்­கும் என்­னால் உதவ முடி­யாது என்று தெரி­யும். ஆனா­லும் சமு­தா­யப் பிரச்­சி­னை­க­ளுக்கு சிங்­கப்­பூர் காவல்துறை தொடர்ந்து தீர்­வு­கள் காணும் என்று நம்­பு­கிறேன்,” என்­றார். பல்­வேறு குற்­றங்­கள் பற்­றிய விழிப்­பு­ணர்வை மக்­க­ளி­டத்­தில் ஏற்­ப­டுத்த, தாம் தொடர்ந்து சமூக அமைப்­பு­க­ளு­டன் சேர்ந்து பணி­யாற்ற விரும்­பு­வ­தாக ஜோஷுவா கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!