‘என் கிராமத்தை சிங்கப்பூர் போல மாற்ற விரும்புகிறேன்’

இந்­தி­யா­வின் குஜ­ராத் மாநி­லத்­திலி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு மிதி­வண்­டிப் பய­ணம் மேற்­கொண்டு வந்­துள்ள ஆஷிஷ் ஜெர்ரி செளத்ரி என்ற 25 வயது மாண­வ­ருக்கு ஒரே கன­வு­தான். சுகா­தா­ரம், சுற்­றுச்­சூ­ழல் குறித்த விழிப்­பு­ணர்வை மக்­க­ளி­டத்­தில் ஏற்­ப­டுத்த வேண்­டும். 101 நாள்­களில் 7,000 கிலோ­மீட்­டர் கடந்து வந்­துள்­ளார் இவர்.

இந்­தி­யா­வின் கிரா­மத்­துப் பள்ளி­கள், மலே­சி­யா­வின் ‘குளோ­பல் இந்­தி­யன் இன்­டர்­நே­ஷ­னல்’ பள்ளி ஆகி­ய­வற்றை அடுத்து சிங்­கப்­பூர் போஜ்­பூரி சங்­கம், ரோட்­டரி கிளப், ஸ்ரீ லக் ஷ்மி­நாரா ­ய­ணன் கோயில் முத­லிய இடங்­களுக்­குக் கடந்த வாரம் சென்று தமது இயக்­கத்­தைப் பற்­றி­யும் இந்­தி­யா­வின் சுற்­றுச்­சூ­ழல் குறித்­தும் பேசி­னார். லிஷா எனப்­படும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டைமை சங்­கம் இவ­ரது முயற்­சியை மெச்சி, பாராட்டு விழா ஒன்­றினை கடந்த செவ்­வாய்க்­கிழமை ரேஸ் கோர்ஸ் சாலை­யில் அமைந்­துள்ள காயத்ரி உண­வகத்­தில் ஏற்­பாடு செய்­தது.

ராஜஸ்­தா­னின் மணல்­மே­டு­கள் நிறைந்த ஜுன்­ஜுனு பகு­தி­யில் பிறந்து வளர்ந்­த­வர் ஜெர்ரி. நீர்­வ­ளங்­கள் இல்­லாத அவ­ரின் கிரா­மத்­தில் தின­சரி பயன்­பாட்­டுக்கு மழை நீரைச் சேக­ரித்­தா­க­வேண்­டும். அங்கு கோடைக்­காலத்­தில் வெப்­ப­நிலை 50 டிகிரி வரை அதி­க­ரிக்­கும்; பனிக்­கா­லத்­தில் -5 டிகிரி வரை குறை­யும்.

தங்­கை­யு­ட­னும் தாத்­தா­வு­ட­னும் சிறு­வ­ய­தி­லி­ருந்தே ஜெர்ரி தின­மும் உடற்­ப­யிற்சி மேற்­கொண்ட காடு, இப்­போது குப்பை­மே­டாக உள்­ளது. பரு­வ­நிலை மாற்­றத்­தா­லும் மக்­க­ளின் அலட்­சி­யத்­தா­லும் பெரும் பாதிப்பு­கள் ஏற்­ப­டு­கின்­றன என்­பதை உணர்ந்­த­போது இதற்­கென ஓர் இயக்­கத்­தைத் தொடங்­க­வேண்­டும் என முடி­வெ­டுத்­தார் ஜெர்ரி.

புதுடெல்­லி­யி­லி­ருந்து ஜுன்­ஜுனு வரை, புது டெல்­லி­யிலிருந்து ஜெய்­சால்­மர் வரை, காஷ்­மீ­ரி­லி­ருந்து கன்­னியா­கு­மரி வரை என மிதி­வண்­டி­யில் அவர் மேற்­கொண்ட விழிப்­பு­ணர்­வுப் பய­ணங்­கள் ஏரா­ளம். மாண­வர்­களை­யும் அமைப்­பு­க­ளை­யும் சந்­தித்து சுகா­தா­ரம் குறித்த விழிப்­புணர்வை ஏற்­ப­டுத்தி வரு­கி­றார்.

“ஒவ்­வொரு மாண­வ­ரும் ஒரு மரம் நட வேண்­டும் என்று அறி­வுரை கூறு­வேன்,” என்­றார் அவர்.

இவர் படித்த கிரா­மத்­துப் பள்ளி­யில் இவர் நட்ட வாகை மரம் இன்று உயர்ந்து வளர்ந்து நிற்­பது நம்­பிக்கை அளிப்­ப­தாக உள்­ளது என்­றார் அவர்.

ஐந்து நாடு­க­ளைக் கடக்­க­வேண்­டும் என்ற அவ­ரது குறிக்­கோளை நிறை­வேற்­றும் நோக்­கில் தற்­போது இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்து பாத்­தாம், பிந்­தான் பகுதி­க­ளுக்கு மிதி­வண்­டிப் பய­ணம் மேற்­கொண்டு வரு­கி­றார். சிங்­கப்­பூ­ரின் எழில்­மிகு இயற்­கைச் சூழ­லும் பிரத்­தி­யே­க­மாக ஒதுக்­கப்­பட்ட மிதி­வண்­டிப் பாதை­களும் ஜெர்­ரி­யைப் பெரி­தும் கவர்ந்­துள்­ளன.

“எனது கிரா­மத்தை சிங்­கப்­பூர் போல் மாற்ற விரும்­பு­கி­றேன்,” என்­றார் ஜெர்ரி.

செய்தி: விஷ்ணு வர்­தினி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!