வெறுங்காலோடு கையில் எடையுடன் ஓடும் மருத்துவர் ஸ்ரீநிவாஸ்

வி.கே. சந்­தோஷ்­கு­மார்

இரு கைக­ளி­லும் 2 கிலோ எடையை ஏந்­தி­ய­வாறு ஓடு­ப­வரை சிங்­கப்­பூ­ரில் காண்­பது அரிது. இதை டாக்­டர் ஸ்ரீநி­வாஸ் சுப்­ர­மணி­யம் வாரம் மூன்று முறை வெறுங்­கா­லு­டன் மேற்­கொண்டு வரு­கி­றார். சிறு­நீ­ரக நிபு­ண­ரான இவர், ஒவ்­வொரு முறை­யும் 10 கிலோ­மீட்­டர் தூரம்­வரை ஓடு­வதா­கக் கூறி­னார்.

“எடை தூக்­கும்­போது அந்­தக் கூடு­தல் பாரத்தை உங்­க­ளின் கால்­கள் சுமக்க வேண்­டி­யுள்­ளது. இத­னால் கால் தசை­கள் வலுப்­பெ­று­கின்­றன. அதே­வேளை எடை­க­ளைக் கைகளில் நான் பிடித்­தி­ருப்­ப­தால் எனது கையின் தசை­க­ளுக்­கும் பயிற்சி கிடைக்­கிறது,” என்­றார் 46 வய­து­டைய டாக்­டர் ஸ்ரீநி­வாஸ்.

வேலை கார­ண­மாக 2009ல் சென்­னை­யி­லி­ருந்து சிங்­கப்­பூர் வந்த டாக்­டர் ஸ்ரீனி­வாஸ், கூடு­தல் கலோ­ரி­க­ளைக் குறைப்­பதே எடை­யு­டன் ஓடும் இந்­தப் பயிற்சி­யின் நோக்­கம் என்­றார்.

காயம் ஏற்­ப­ட­லாம் என அஞ்சி தொழில்­முறை ஓட்ட வீரர்­கள் எடை­யு­டன் ஓடு­வ­தைப் பொது­வாகத் தவிர்க்க முயல்­வர். இருப்­பி­னும் வலு­வான உடல்­நிலை இருப்­ப­வர்­க­ளுக்கு இத்­த­கைய உடற்­ப­யிற்சி மேலும் வலு­சேர்க்­கும் என்­றார் டாக்­டர் ஸ்ரீநி­வாஸ்.

ஓடும் வேகம், ஆற்­றல் ஆகி­ய­வற்றை மேம்­ப­டுத்­தும் இந்த உடற்­ப­யிற்சி, மூட்­டு­களை வலுப்­படுத்தி காயம் ஏற்­படும் அபா­யத்­தைக் குறைக்­கும் தன்­மை­யை­யும் பெற்­றது.

கடந்த 20 ஆண்­டு­க­ளாக ஓட்­டப் பயிற்­சியை மேற்­கொண்டு வரு­வ­தா­கக் கூறிய டாக்­டர் ஸ்ரீநிவாஸ், இது­வரை தமக்­குக் காயம் ஏற்­பட்­ட­தில்லை என்­றார்.

“நான் வழக்­க­மாக மணிக்கு 11 கிலோ­மீட்­டர் வேகத்­தில் ஓடு­வேன். எடை தூக்­கி­யி­ருந்­தால் என் வேகத்தை மணிக்கு 8 கிலோ­மீட்­ட­ருக்­குக் குறைத்­துக்­கொள்­வேன்,” என்­றார் அவர்.

ஓடு­வது தமக்கு மிக­வும் விருப்­ப­மான ஒரு நட­வ­டிக்கை என்று கூறிய டாக்­டர் ஸ்ரீநி­வாஸ், உதய சூரி­ய­னின் இள­வெ­யி­லும் குரு­வி­க­ளின் கீச்­சொ­லி­யும் நிறைந்த காலைப் பொழு­தைத் தாம் ரசிப்­ப­தா­கத் தெரி­வித்­தார். அண்­டை­வீட்­டா­ரைப் பார்த்­துப் புன்­ன­கைத்து வணக்­கம் கூறு­வதை­யும் அவர் வழக்­க­மாக்­கிக்­கொண்­டார்.

“இவ்­வாறு செய்­வது மன­ந­ல­னுக்­கும் நல்­லது,” என்­றார் அவர்.

“வெறுங்­கா­லு­டன் ஓடு­வ­தால் பாதத் தசை­க­ளைப் பிடித்து விடு­வது போன்று இருக்­கும்,” என்­றார் அவர்.

தனி­யார் மருந்­த­கத்­தில் ஒவ்­வொரு நாளும் 9 மணி­நே­ரம் வரை பணி­பு­ரி­யும் 55 கிலோ எடை­யு­டைய டாக்­டர் ஸ்ரீநி­வாஸ், தமது ஓட்­டப் பயிற்­சி­யின் மூலம் தம் உடல் மேலும் வலிமை பெற்­றிருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

“எடை­யு­டன் ஓட­வேண்­டும் என்று எல்­லா­ருக்­கும் நான் கூற­மாட்­டேன். இருப்­பி­னும் ஓடு­வதை நான் ஊக்­கு­விப்­பேன். அதில் ஒரு­வித இன்­பம் அடங்­கி­யி­ருக்­கிறது. உங்­க­ளின் நாளை உற்­சாகத்­து­டன் தொடங்க முடி­யும்,” என்­றார் அவர்.

ஆங்­கி­லக் கட்­டு­ரை­யின் மொழி­பெ­யர்ப்பு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!