நீரிழிவால் இனிமையை இழந்தாலும் நம்பிக்கை இழக்காதவர்

ஆ. விஷ்ணு வர்­தினி

நீரி­ழிவு நோய் முழு­வீச்­சாக சசி­த­ர­னைத் தாக்­கி­ய­போது, அவர் தன் வாழ்க்­கை­யில் ஒரு புதிய அத்­தி­யா­யத்­தைத் தொடங்கி இருந்­தார்.

புது வீடு, புதி­தாக மணந்­து­கொண்ட மனைவி என அனைத்­தும் நல்­ல­வி­த­மா­கக் கைகூடி வந்­தன. மனம் முழுக்­கக் கன­வு­க­ளோடு வலம்­வந்த வேளை­யில், நீரி­ழி­வால் அவ­ரது வலது பாதத்­தில் சிறு பகு­தியை அகற்­ற­வேண்­டிய கட்­டா­யம். அதைத் தொடர்ந்து பல இழப்­பு­களை அவர் சந்­திக்க நேரிட்­டது.

16 வய­தி­லி­ருந்து ‘டைப் 2’ நீரி­ழிவு நோயால் பாதிக்­கப்­பட்ட சசி­த­ர­னுக்கு, 21 வய­தில் ‘டைப் 1’ நீரி­ழிவு நோய் ஏற்­பட்­டது. தின­மும் ‘இன்­சு­லின்’ ஊசி போட்­டுக்­கொள்ள வேண்­டிய நிலை­மைக்­குத் தள்­ளப்­பட்­டார்.

தாத்தா, தந்தை என சசி­த­ர­னின் உற­வி­னர் பல­ருக்கு நீரி­ழிவு நோய் இருந்­த­போ­தும் அது தொடர்­பான ஆபத்­து­களை அவர் அறிந்­தி­ருக்­க­வில்லை. விரைவு உண­வு­வ­கை­க­ளை­யும் சர்க்­கரை அதி­கம் சேர்க்­கப்­பட்ட பானங்­க­ளை­யும் தொடர்ந்து உட்­கொண்­டார். பணிச்­சு­மைக்­கி­டையே உடற்­ப­யிற்­சி­யும் செய்­ய­வில்லை.

32 வய­தில் அவ­ருக்கு வலது காலில் கடு­மை­யான தொற்று ஏற்­பட்­டது. முட்­டிக்­குக்­கீழ் உள்ள பகு­தியை முழு­வ­தும் அகற்ற வேண்­டும் என்று மருத்­து­வர்­கள் கூறி­ய­போது சசி­த­ரன் அதிர்ச்­சி­அடைந்­தார். குடும்­பத்­தில் வேறு யாருக்­கும் இத்­த­கைய பாதிப்பு ஏற்­பட்­ட­தில்லை.

“எனக்­குக் குழப்­ப­மாக இருந்­தது. மன­மு­டைந்து போனேன். வேறு மருத்­து­வரை நாடி­ய­போது, முத­லில் சிறு பகு­தியை மட்­டும் அகற்­றிப் பார்க்­க­லாம் என முடி­வா­னது. மீண்­டும் நடக்­கக் கற்­றுக்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது,” என்­றார் தற்­போது 40 வய­தா­கும் சசி­த­ரன் அன்­ப­ழ­கன்.

செயற்­கைக் கால், பின்­னர் செயற்­கைப் பாதம் ஆகி­ய­வற்­றைப் பொருத்தி இருந்­தார் சசி­த­ரன். ஏறத்­தாழ மூன்று மாதங்­கள் சக்­கர நாற்­கா­லி­யில் நட­மா­டி­னார்.

கணக்­க­ரான அவ­ருக்கு அதிர்ஷ்­ட­வ­ச­மாக, ஓராண்டு கழித்து வேறொரு நிறு­வ­னத்­தில் நிதித் துணை நிர்­வா­கி­யா­கும் வாய்ப்பு கிட்­டி­யது. ஆனால் மறு ஆண்டு அவ­ரின் மண­வாழ்க்கை முடி­வுக்கு வந்­தது.

குடும்­பத்­தா­ரின் ஆத­ர­வால் தொடர்ந்து சசி­த­ரன் உழைத்­த­போ­தும் நிதி நெருக்­க­டி­யைச் சமா­ளிக்க இர­வில் அல்­லது வார இறு­தி­யில் வாடகை உந்­து­வண்டி ஓட்­டிப் பணம் ஈட்ட முயன்­றார். வேலைப்­பளு கார­ண­மாக மீண்­டும் ஆரோக்­கி­ய­மற்ற வாழ்க்­கை­மு­றைக்­குத் திரும்­பி­னார்.

2019 ஆம் ஆண்டு இவ­ருக்கு பக்­க­வா­தம் ஏற்­பட்­டது. இடது கையும் காலும் செயல் இழந்த நிலை­யில் வாழ்க்­கை­யின்­மீது நம்­பிக்கை இழந்­தார் சசி­த­ரன். சில மாதங்­கள் கழித்து சிறு­நீ­ர­கம் செய­லி­ழந்­தது தெரி­ய­வந்­த­தும் உயிரை மாய்த்­துக்­கொள்­ள­லாம் என்­று­கூட எண்­ணி­னார்.

“பெற்­றோ­ருக்­குப் பெரிய பார­மாக இருந்­ததை உணர்ந்­தேன். பக்­க­வா­தம் ஏற்­பட்டு எத்­தனை நாள் முடங்கி இருப்­பேன் என்று யாருக்­கும் தெரி­யாது. எப்­ப­டியோ ஆறு மாதங்­களில் குண­ம­டைந்­த­வு­டன் நிம்­ம­திப் பெரு­மூச்சு விடு­வ­தற்­குள் மேலு­மோர் இடி. பதின்ம வய­தி­லி­ருந்தே உடல் நல­னில் கவ­னம் செலுத்­தா­மற் போனேனே என்று வருத்­தப்­ப­டாத நாளே இல்லை,” என்­றார் சசி­தரன்.

கடந்த ஈராண்­டு­க­ளாக, வாரம் மூன்று முறை ‘டயா­லி­சிஸ்’ எனும் ரத்த சுத்­தி­க­ரிப்பு சிகிச்சை செய்து­கொள்­கி­றார். வாழ் நாள் முழுவதும் அவர் இதை மேற்­கொண்­டாக வேண்­டும்.

ஒவ்­வொரு சிகிச்சை அமர்­வும் நான்கு மணி நேரம் நீடிக்­கிறது. பெரிய கன­வு­கள் காண்­ப­தைக் கைவிட்­டா­லும் உல­கெங்­கும் பய­ணம் செய்ய வேண்­டும் என்ற ஆவலை இன்­னும் உறு­தி­யா­கப் பிடித்­துள்­ளார் சசி­த­ரன்.

தற்­போது தன்­னு­ரி­மைக் கணக்­கா­ள­ரா­கப் பணி­யாற்­றும் இவர் யாரை­யும் சார்ந்­தி­ருக்­கா­மல் சுதந்­தி­ர­மாக நட­மா­டு­கி­றார்.

இள­மை­யில் இனி­மை­யைத் தொலைத்த வருத்­தத்­தில் ஆழ்ந்­து­வி­டா­மல் வாழ்க்­கைக்­குத் தேவை­யான உறு­தியை அதே இள­மைக்­கா­லம் தந்­துள்­ள­தா­கக் கரு­து­கி­றார் சசி­த­ரன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!