புகழ்பெற்ற பறையிசைக் கலைஞர் வேலு ஆசான் படைத்த பயிலரங்கு

மாதங்கி இளங்­கோ­வன்

புகழ்­பெற்ற பறை­யி­சைக் கலை­ஞர் வேலு ஆசான் வழி­காட்­டு­த­லு­டன் பறை­யி­சை­யைப் பற்றி மேலும் ஆழ­மா­கக் கற்­றுக்­கொள்­ளும் வாய்ப்பு ‘டமாரு சிங்­கப்­பூர்’ குழு­வுக்­குக் கிடைத்­தது.

இந்­திய தாள வாத்­திய இசையை முறை­யா­கக் கற்­றுக்­கொ­டுக்­க­வும் இந்த ­இசையை சிங்­கப்­பூ­ரில் மட்­டு­மல்­லா­மல் உல­கெங்­கும் ஒலிக்க வைக்­க­வும் பற்­பல முயற்­சி­களில் ‘டமாரு சிங்­கப்­பூர்’ ஈடு­பட்டு வரு­கிறது.

அவ்­வி­தத்­தில் இந்தக் குழுவை நிறு­விய அக்­‌ஷரா திரு, இந்­தி­யா­வில் தாம் சந்­தித்த வேலு ஆசானை சிங்­கப்­பூ­ருக்கு வர­வழைத்­துச் சிறப்­புப் பயி­ல­ரங்கு ஒன்­றை ஏற்­பாடு செய்­தி­ருந்­தார்.

சிறு­வ­னாக இருந்­த­தி­லி­ருந்தே தம்­மு­டன் பய­ணம் செய்த ஒரு கலை இந்­தப் பறை­யி­சை­தான் என்­றார் வேலு ஆசான் என்­று அழைக்­கப்­படும் திரு வேல்­மு­ரு­கன்.

தந்­தை­வழி தாம் கற்ற இந்தக் கலை, தமது வாழ்­விற்­குப் பொருள் தந்­தது என்றார் அவர்.

மது­ரை­ அலங்­கா­நல்­லூ­ரில் வளர்ந்த இவர், பறை­யி­சையை இந்­தி­யா­வில் மட்­டு­மல்­லா­மல் கடந்த பல ஆண்­டு­க­ளாக மலே­சியா, சீனா, துபாய், இலங்கை, சிங்­கப்­பூர் எனப் பல நாடு­களிலும் படைத்­துள்­ளார்.

தற்­போது ‘சமர்’ கலைக்­கு­ழு­வின் தலை­வ­ராக உள்­ளார் வேலு ஆசான்.

இம்­மா­தம் நான்கு நாள்­களுக்கு நீடித்த பயி­ல­ரங்கு, ‘டமாரு சிங்­கப்­பூர்’ குழு­வி­ன­ரின் கற்­ற­லுக்கு மெரு­கூட்­டி­ய­து.

­மேலும், அவர்­கள் முன்பு படைத்­தி­ருந்த பறை­யி­சைக்கு எந்த மா­தி­ரி­யான மாற்­றங்­க­ளைச் செய்ய வேண்­டும் என்­ப­தை­யும் அறிந்­து­கொள்ள அரிய வாய்ப்­பாக இப்பயிலரங்கு அமைந்­தது.

“பறை இசைக்­க­ரு­வியை எவ்­வாறு முறை­யா­கக் கைகளில் பிடித்­துக்­கொள்­வது, பறை­யாட்­டம் ஆடும்­போது அக்­க­ரு­வி­யைப் பிடித்து எவ்­வாறு கீழே இறங்கி உட­ன­டி­யாக நிற்­பது என்­ப­தை­யெல்­லாம் வேலு ஆசான் படிப்­படி­யாக எங்களுக்குக் கற்­றுத் தந்­தார்,” என்று ‘டமாரு’ குழு­வைச் சேர்ந்த கலை­ஞர் சன்ஜீவ் சேக­ரன் கூறி­னார்.

“முக­பா­வ­னை­களை எப்­படி வெளிப்­ப­டுத்­து­வது என அழ­காகக் கற்­றுத்­தந்­தார் அவர். குழு­வி­ன­ரு­டன் ஒருங்­கி­ணைந்து ஒரே சீராகப் படைப்­பது பற்­றி­யும் பகிர்ந்து­கொண்­டார்,” என்­றார் ‘டமாரு’ குழுக் கலை­ஞர் மித்ரா நாயுடு.

சிங்­கப்­பூ­ரில் கலை­ஞர்­களுக்குப் பறை­யாட்­டத்­தைக் கற்­றுக்­கொ­டுப்­ப­தில் பெரு­மை­கொள்­ளும் வேலு ஆசான், “தமிழ் மண்­ணின் பாரம்­ப­ரி­யக் கலை இது.

மனி­தன் பேசக் கற்­றுக்­கொள்­வதற்கு முன்­னரே பிறந்த இந்­தக் கலை சாதி, மதம் அறி­யாது. தெய்­வீ­க­மானது கலை,” என்­றார்.

வேலு ஆசான் ‘சூர­ரைப் போற்று’, ‘பேட்ட’, ‘தர்­ம­துரை’ போன்ற திரைப்­ப­டங்­களில் பறை­யிசை வாசித்­தி­ருப்­ப­து­டன் சில­திரைப் படங்களில் நடித்­தும் உள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!