சாதனை படைத்த அட்டைப் பூக்கள்

முட்டைகளை அடுக்கி வைக்­கும் அட்­டைப்­பெட்டி­க­ளைக்கொண்டு வடி­வ­மைக்­கப்­பட்ட, மறுபயனீட்டு மலர்ப் படைப்பு முதல்­மு­றை­யாக சிங்­கப்­பூர் சாதனைப் புத்­த­கத்­தில் ஸ்ரீ நாரா­யண மிஷன் அமைப்­பிற்கு ஓர் இடத்­தைப் பெற்­றுத்­தந்­துள்­ளது.

ஸ்ரீ நாரா­யண மிஷனின் தாதிமை இல்­லம், ஈசூன், உட்­லண்ட்ஸ் மூத்­தோர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் ஆகி­ய­வற்றைச் சேர்ந்த குடி­யி­ருப்­பா­ளர்கள், வாடிக்­கை­யா­ளர்­கள், சேவைப் பய­னா­ளர்­கள் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து இந்தக் கலைப்­படைப்பை உரு­வாக்­கி­யுள்ளனர்.

ஸ்ரீ நாரா­யண மிஷன் இவ்­வாண்டு 75வது ஆண்டு நிறை­வைக் கொண்­டா­டு­கிறது. அதை­யொட்டி, 2.4 மீட்­டர் உய­ர­மும் 6.6 மீட்­டர் நீள­மும் கொண்ட இப்படைப்பு உரு­வாக்கப்பட்டது.

அமைப்­பின் ஆரஞ்சு, மஞ்­சள், நீல வண்­ணங்­களில் 750 பூக்­கள் இதில் இடம்­பெற்­றுள்­ளன.

மே 31ஆம் தேதி அன்று இந்தப் படைப்பு சிங்­கப்­பூர் சாதனைப் புத்­த­கத்­தில் பதி­வா­னது.

இதனை உரு­வாக்க, அமைப்பைச் சேர்ந்­தோர் ஏறக்­குறைய நான்கு மாத கால­மாக நேரத்தை அர்ப்­ப­ணித்­ததாக ஸ்ரீ நாரா­யண மிஷன் குறிப்­பிட்­டது.

“முதி­யோர் தங்­கள் கலைத் திறன்­களை வெளிப்­படுத்த இந்தத் திட்­டம் நல்­ல­தொரு தள­மாக அமைந்­தது. மேலும், அவர்­களுக்­குள் பெரு­மை­யை­யும் சாதனை உணர்­வை­யும் இம்­முயற்சி தூண்­டி­யது,” என்று அது தெரி­வித்­தது.

செய்தி: சபிதா ஜெய­கு­மார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!