எதிர்பாராத நேரத்தில் கைகொடுத்த மருத்துவப் பயிற்சி

ஏரா­ள­மான விமா­னச் சேவை­களில் ஒன்­றி­ரண்­டில் மட்­டுமே அவ­சர மருத்­துவ சிகிச்­சைக்­கான தேவை ஏற்­ப­டு­கின்­றது. அது­போன்ற விமா­னத்­தில் இரு­முறை இருந்­துள்­ளார் திரு சுந்­தர்.

ஏப்­ரல் மாதம் துபா­யி­லி­ருந்து லண்­டன் செல்­லும் விமா­னத்­தில் சென்று கொண்­டி­ருந்த திரு சுந்­தரை உறக்­கத்­தி­லி­ருந்து எழுப்­பி­யது, ‘கைதேர்ந்த மருத்­துவ நிபு­ணர் தேவை’ எனும் அறி­விப்பு. அவ­ச­ர­நிலை ஒன்று நேர்ந்­துள்­ள­தா­க­வும், மருத்­துவ உதவி உடனே தேவைப்­ப­டு­வ­தா­க­வும் அந்த அறி­விப்பு கூறி­யது.

தன்­னு­டன் 400 சக­ப­ய­ணி­கள் இருக்­கும் பெரிய விமா­னத்­தில் தாதியோ மருத்­து­வரோ இல்­லாத நிலைக்­கான சாத்­தி­யம் குறைவே என்று ஒரு­பு­றம் திரு சுந்­தர் எண்­ணி­னார்.

முழு­நே­ர­மாக பாது­காப்­புத் துறை­யில் பொறி­யி­யல் சார்ந்த வேலை பார்க்கும் திரு சுந்­தர் தேர்ச்­சி­பெற்ற மருத்­துவ உத­வி­யா­ள­ரும்­கூட.

பதி­னாறு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தேசிய சேவை காலத்­தின்­போது அவர் பெற்ற மருத்­து­வ உதவியாளர் பயிற்சி அவ­ரின் நினை­வில் நிலைத்­தி­ருந்­தது. இக்­கட்­டான நிலை­யில் அப்­ப­யிற்சி ஒரு­வேளை உத­வ­லாம் என்ற சிந்­தனை அவரை விமா­னப் பணி­யா­ளர்­களை நோக்கி விரைந்­தோ­டச் செய்­தது.

ஆறடி உயர மத்­திய கிழக்கு நாட்­ட­வர் ஒரு­வர் மயக்­க­மு­றும் நிலை­யில் இருப்­பதை திரு சுந்­தர் கண்­டார். விமா­னக் குழு­வி­டம் தாம் ‘Paramedic Level 2’ தகுதி பெற்­றி­ருப்­பதைக் கூறி, உடனே அந்த ஆட­வரை கவ­னிக்க முற்­பட்­டார். ஐம்­பது வய­து மதிக்கத்தக்க, உடல்­வா­கில் பெரி­தான அந்த ஆட­வ­ருக்கு மூச்­சுத்­தி­ண­றல் ஏற்­பட்­டி­ருந்­தது.

தாம் கற்ற மருத்­துவ அணு­கு­முறை­களை நினை­வு­ப­டுத்தி, ரத்த அழுத்­தம், உயிர்­மூச்சு அளவு ஆகி­ய­வற்றை நோயாளியின் முக்கிய அறிகுறிக் கரு­வி­யைக் கொண்டு திரு சுந்­தர் கண்­கா­ணித்­தார். திடீ­ரென நோயாளி வாந்தி எடுக்­கத் தொடங்­கி­ய­வு­டன் அவரை சரி­வர கவ­னித்து பொறு­மை­யாக வழி­காட்­டி­னார் திரு சுந்­தர். நோயா­ளி­யைத் தூய்­மைப்­ப­டுத்தி, புது உடை அணி­ய­வும் அவர் உத­வி­னார்.

அச்­ச­ம­யத்­தில் அங்கு வந்து சேர்ந்த தாதி ஒரு­வ­ரும் திரு சுந்­த­ரு­டன் இணைந்து அவ­ருக்­குத் தக்க பரா­ம­ரிப்பு வழங்க உத­வி­னார்.

“அரபு மொழி மட்­டுமே பேசிய அந்த ஆட­வர் கூறு­வதைப் புரிந்­து­கொள்ள சிர­ம­மாக இருந்­தது. அவ­ரின் நண்­ப­ரின்­மூ­லமே அவ­ருக்கு செரி­மா­னப் பிரச்­சினை ஏற்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது."

“அந்த முக­ம­றியா ஆட­வ­ருக்கு இயன்­ற­வரை உத­வி­யது மிகுந்த மன­நி­றைவு அளித்­தது,” என்­றார் திரு சுந்­தர் பில­வேந்­தர்­ராஜ்.

இத்­த­கைய சூழ்­நி­லை­யில் உத­வு­வது திரு சுந்­த­ருக்கு முதல்­முறை அன்று. நான்­காண்­டு­க­ளுக்கு முன்­னர் மியன்­மா­ரி­லி­ருந்து சிங்­கப்­பூர் திரும்­பிக்­கொண்­டி­ருந்த சம­யத்­தி­லும் ஒரு மருத்­துவ அவ­ச­ர­நி­லை­யில் அவர் உதவினார்.

அதி­க­ள­வில் மது அருந்­தி­விட்டு மூர்ச்­சை­யற்று இருந்த ஓர் ஆட­வ­ருக்கு திரு சுந்­தர் உத­வி­னார்.

“எதிர்­பா­ராத நேரங்­களில் நாம் கற்­றுக்­கொண்ட திறன்­கள் நமக்கோ, நம்­மைச் சுற்­றி­யுள்­ளோ­ருக்கோ கைகொ­டுக்­கும் என்­பதை மற­க்கா­மல் அவற்­றைத் தொடர்ந்து நினை­வில் வைத்­துக்­கொள்­வது பய­னுள்­ள­தாய் அமை­யக்­கூ­டும்,” என்று தெரி­வித்­தார் திரு சுந்­தர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!