வாழ்க்கைப் பாடம் புகட்டிய மறுவாழ்வு இல்லத்தினர்

இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அமைந்த ஒன்று, சுவரோவியம் படைப்பாகும். படம்: ஜென் 2000 குழு/நன்யாங் தொடக்கக் கல்லூரி
சமூகத் தொண்டின் மூலம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) மாணவர்கள் இந்து அறக்கட்டளை வாரியத்தோடு இணைந்து தீபாவளி நிகழ்ச்சி ஒன்றை மறுவாழ்வு இல்லத்தில் நடத்தினர். படம்: ஜென் 2000 குழு/நன்யாங் தொடக்கக் கல்லூரி

பலகாலமாக தங்கள் குடும்பங்களைப் பிரிந்திருக்கும் மறுவாழ்வு இல்லத்தினர் பலருக்கு ஊக்கம் தேவைப்படுகிறது. எதிர்காலத்தில் இவர்கள் சமுதாயத்துடன் சுமுகமாக ஒருங்கிணைந்து செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்குச் சான்றாக, சமூகத் தொண்டின் மூலம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) மாணவர்கள் இந்து அறக்கட்டளை வாரியத்தோடு இணைந்து தீபாவளி நிகழ்ச்சி ஒன்றை ‘ஆஷ்ரம்’ மறுவாழ்வு இல்லத்தில் நடத்தினர். 60 மறுவாழ்வு இல்லவாசிகளும் அவர்களுடைய குடும்பத்தாரும் 40 பல்கலைக்கழக மாணவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

‘என்யுஎஸ் ஜென்’ பாடத்தின் சமூக சேவைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி, நவம்பர் 18ஆம் தேதி நடைபெற்றது.

‘என்யுஎஸ் ஜென்’ பாடம் படிக்கும் மாணவர்கள், என்யுஎஸ் பல்கலைக்கழக இசைக்குழுவினர், நன்யாங் தொடக்கக் கல்லூரியின் புகைப்படக் கலை மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, சுவரோவியம் படைப்பு ஒன்று இடம்பெற்றது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து இந்த சுவரோவியத்தை உயிர்ப்பிப்பதற்கு லாசால் கலைக் கல்லூரியைச் சேர்ந்த தேவியின் ஓவியத் திறன் முக்கியப் பங்காற்றியது.

சுவரோவியப் படைப்பு , ‘மீட்புக்கான பயணம்’ என்ற தலைப்பையொட்டி அமைந்ததாகும். தனிநபர்கள் ஒன்றாக நடப்பதைச் சித்திரிக்கும் அந்த ஓவியம், சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் முன்னிலைப்படுத்தும் வகையில் உள்ளது. மேலும், இரண்டாவது வாய்ப்பு அளிப்பதன் சாத்தியம், சமூக ஆதரவின் முக்கியத்துவம் மற்றும் ஒருவருடைய கடந்த காலத்தைப் பொருட்படுத்தாமல், மீட்பு மற்றும் மறு ஒருங்கிணைப்புக்கான பயணம் எப்போதும் அடையக்கூடியவை என்ற நம்பிக்கையையும் படைப்பு முன்வைத்தது.

ஆசிரியரும் முன்னாள் மூத்த வானொலிப் படைப்பாளருமான திருமதி மீனாட்சி சபாபதி, மறுவாழ்வு இல்லத்தினர் பங்கேற்ற கலந்துரையாடலை வழிநடத்தினார். மறுவாழ்வு இல்லத்தினர், தங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து நீண்டகாலமாகப் பிரிந்துள்ளதைச் சகித்துக்கொண்டு, உள் போராட்டங்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பற்றி பகிர்ந்துகொண்டனர்.

அவர்களில் ஒருவர், தான் ஒற்றைப் பெற்றோராக இருந்து தன் பிள்ளைகளை வளர்த்ததைப் பற்றியும் சிறு வயதில் அவருக்கு முன்மாதிரியாக யாரும் இல்லாததால் தவறான பாதையில் சென்றதைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

மேலும், நடந்ததை மறந்து முன்னேற்றம் அடைவதில் மட்டும் குறியாக உள்ளதைப் பற்றியும் தன் குடும்பத்தோடு அவ்வப்போது பேசும்போது அவர்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவைப் பற்றியும் அவர் பகிர்ந்துகொண்டார்.

எதிர்கால ஆசைகள், கனவுகள் பற்றி கேள்விகள் எழுந்தபோது கப்பல் துறையில் ஈடுபடும் விருப்பத்தைப் பற்றி கூறினார். எல்லாவற்றிற்கும் மேலாக, தன் ஆசைகளை முன்வைத்து, மற்றவர்களுக்காக வாழ்வதைத் தவிர்ப்பதன் அவசியத்தைப் பற்றியும் அறிவுறுத்தினார்.

இத்தகைய போராட்டங்களைச் சந்திக்காத மாணவர்களுக்கு இந்த அனுபவம் ஓர் ஆழமான பாடமாக அமைந்தது என்று இந்நிகழ்ச்சியின் படைப்பாளர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம், வணிகப் பகுப்பாய்வுகளில் நிபுணத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் திரு த.சரவணன், 31, குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!