முடி திருத்தும் தொழில்வழி தொண்டூழியம்

முதியோர், சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோர், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு இலவசமாக முடி திருத்தும் சேவை வழங்கிவருகிறார் ‘இந்தியன் பார்பர் ஷாப்’ உரிமையாளர் வீரப்பன் முத்துக்குமரன், 46.

கடையின் 10 கிளைகளைத் தீவு முழுவதும் நடத்திவரும் இவர், பொதுவாக ஆண்களுக்கு முடி திருத்தும் சேவை வழங்குபவர்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னர் எதேச்சையாக இத்தொழிலை நடத்தும் வாய்ப்பு இவருக்கு அமைந்தது.

வங்கிச் சேவைத் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், மனைவி விருப்பப்பட்டதால் 2010ஆம் ஆண்டில் தமிழகத்தின் சென்னையிலிருந்து வாழ்வாதாரம் தேடி சிங்கப்பூர் வந்தார்.

ஆனால், தேடுதல் தனக்குச் சாதகமாக அமையாத காரணத்தால் சிறிது காலம் ஆலோசனைத் துறையில் சுயதொழில் பார்த்து வந்தார்.

ஜாலான் காயுவில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதி ஒன்றுக்கு அருகில் செயல்பட்டு வந்த முடி திருத்தும் கடையின் உரிமையாளர்கள், அத்தொழிலை வேறொருவரிடம் ஒப்படைக்க விரும்புவதாக முத்துக்குமரனுக்குத் தெரியவந்தது.

அவ்வாறு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு முடி திருத்தும் தொழிலுக்கு அறிமுகமானார் அவர். கடையில் மலேசியா, இந்தியா நாடுகளைச் சேர்ந்த முடி திருத்துபவர்களைப் பணியில் அமர்த்தினார்.

அச்சமயத்தில் ஜாலான் காயு குடியிருப்புப் பேட்டையில் வசிக்கும் முதியவர்கள், வசதிகுறைந்த குடும்பங்கள் ஆகியோருக்கு இலவசமாக முடி திருத்தும் சேவையையும் முத்துக்குமரன் மாதம் இரு முறை வழங்கி வந்தார். இதுவரை 11,000க்கும் மேற்பட்டவர்கள் இந்த இலவச சேவையினால் பயனடைந்துள்ளதாக முத்துக்குமரன் பகிர்ந்தார்.

பின்னர், சாங்கி மருத்துவமனை, ஏவா தாதிமை இல்லம், பெத்தனி தாதிமை இல்லம் ஆகிய இடங்களுக்கும் சென்று இலவச முடி திருத்தும் சேவை வழங்க அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன.

“இந்தத் தொழிலிலிருந்து பணம் ஈட்டுகிறோம் என்பதை விட, சமுதாயத்துக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன் என்ற திருப்தி கிடைக்கிறது. இயலாதவர்களுக்கு இலவச சேவையை வழங்கும்போது அதுவும் ஒரு சாதனை போலத் தெரிகிறது,” என்று சொன்னார் முத்துக்குமரன்.

கடை வாடகை அதிகம் என்றாலும் 5 வெள்ளியிலிருந்து 25 வெள்ளி வரை கட்டணம் வசூலிக்கிறார் முத்துக்குமரன்.

இலவச சேவை குறித்து அறிந்துகொண்டு அவரது கடைக்கு வரும் முதியவர்கள், “நாங்கள் உண்மையாகவே பணம் செலுத்தத் தேவையில்லையா?” என்று அதிசயித்துக் கேட்பார்களாம்.

முத்துக்குமரனின் ஊழியரான சிவசுப்ரமணியம், 31, “நான் இங்கு ஆறாண்டுகளாக பணிபுரிகிறேன். அண்ணன் (முத்துக்குமரன்) தனது நல்ல உள்ளத்தால் முடியாதவர்களுக்கு இலவசமாக முடி திருத்த எங்களுக்கு ஊக்கம் அளித்தார். இதை நான் ஒரு தொண்டாகக் கருதுகிறேன்,” என்று குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!