பரிவைக் கற்றுத்தந்த தொண்டூழியப் பயணம்

கொள்ளைநோய் காலத்தின்போது தன்னுடைய உறவினர்களையும் நெருங்கிய நண்பர்களையும் பார்க்க முடியாமல் தவித்த சந்தியா, தனியாக வாழும் முதியவர்கள் எவ்வாறு போராடுவார்கள் என்று சிந்திக்கத் தொடங்கினார்.

28 வயதாகும் அவருக்கு, தொண்டூழியத்தில் ஈடுபட கொவிட்-19 உந்துதலாக இருந்தது. ஆரம்பகல்வித் துறையில் பணியாற்றும் பு.சந்தியாவுக்கு, முன்பு சிறு பிள்ளைகளை குறிப்பாக உறவினர்களின் பிள்ளைகளைக் கவனித்துக்கொண்ட அனுபவம் இருந்ததால், அவர் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் தொண்டூழிய வாய்ப்புகளைத் தேடினார்.

‘ஹெச்சிஏ’ எனப்படும் அந்திமகாலப் பராமரிப்பு நிலையத்தில் வாழ்வின் விளிம்பில் தவிக்கும் இளம் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் தொண்டூழிய வாய்ப்பு சந்தியாவை அழைத்தது. கடந்த மூன்றாண்டுகளாக ‘மெடி-மைண்டர்’ தொண்டூழியராக சந்தியா உள்ளார்.

நாள்பட்ட நோய்கள், வாழ்வின் இறுதிக் கட்டத்தில் போராடும் பிள்ளைகள் போன்றவர்களைப் பராமரிக்கத் திண்டாடும் பெற்றோர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக சந்தியா மாதத்திற்கு இருமுறை அவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள நேரம் ஒதுக்குகிறார்.

“பெற்றோர்களுக்குக் கண்டிப்பாக ஓய்வு நேரம் இருக்க வேண்டும். அவர்கள் வேலைக்குச் சென்றுவிட்டு பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வது மிக கடினம். என்னைப் போன்றவர்கள் முன் வருவதால் பெற்றோர்களால் சிறிது நேரமாவது இளைப்பாற முடிகிறது,” என்றார் சந்தியா.

பிறந்த குழந்தையிலிருந்து, 18 வயது வரையிலான பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளும் சந்தியா, ஒவ்வொரு முறையும் அவர்களின் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் பிள்ளையின் நிலையை அறிந்து தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்.

“அவர்களால் தங்கள் உடலை அசைக்க முடியாது. சில பிள்ளைகள் படுத்த படுக்கையாக இருப்பார்கள். நாம் என்ன செய்தாலும் அதற்கு மறுமொழி கூறாமல் இருப்பார்கள்.

சில பிள்ளைகளின் நிலை மிகவும் மோசமாக இருக்கும். உணவுக்குழாய் மூலம் தான் அவர்கள் சாப்பிடுவார்கள். அதைப் பார்க்கும்போது நான் என்னையே நிதானித்துக் கொள்ள பார்ப்பேன்,” என்று கூறினார் சந்தியா.

வீட்டிற்கு வந்ததும் தனிநபர் பாதுகாப்புச் சாதனங்களை அணிந்த பின்னர் சந்தியா முதலில் பிள்ளையைக் கவனிக்கச் செல்வார். பிள்ளையை மிருதுவாகத் தொட்டு அரவணைத்து அதற்குத் தேவையானவற்றை முதலில் செய்துவிட்டு அதனுடன் நேரத்தைச் செலவிடுவார்.

“பேசுதல், பாடல் பாடுதல், புத்தகங்களை வாசித்தல், விளையாடுதல் போன்றவற்றில் அந்தப் பிள்ளைகளுடன் நானும் இணைந்துகொள்வேன். நான் என்ன செய்கிறேன் என்று சிலசமயம் அவர்களுக்குப் புரியாமல் இருந்தாலும் மகிழ்ச்சியாகக் காணப்படுவார்கள். இது என் மனதைக் குளிர வைக்கிறது,” என்று புன்முறுவலுடன் சந்தியா கூறினார்.

குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது எளிது என்ற அவர், முன்பு ஒரு சீன இளையரைப் பார்த்துக்கொண்ட அனுபவத்தை நினைவுகூர்ந்தார்.

“அந்த இளையருக்கு முதுகெலும்பில் பிரச்சினை இருந்ததால் அவர் படுத்த படுக்கையாக இருந்தார். நாங்கள் சேர்ந்து தொலைக்காட்சியில் கேலிச்சித்திர நாடகங்களைப் பார்த்ததை என்னால் மறக்க முடியாது,” என்று சந்தியா பகிர்ந்தார்.

பிள்ளைகள் பெரும்பாலும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை விட, மரபியல் நோய்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய சந்தியா, “இந்தப் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு நிலை ஏன் வர வேண்டுமென்று பலமுறை நான் யோசித்திருக்கிறேன். அதனால் நான் அவர்களின் பெற்றோரிடமும் பேசுவேன்,” என்றார்.

பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவதிலும் பிள்ளைகளுடன் பணியாற்றுவதிலும் மிகுந்த நாட்டம் வைத்திருக்கும் சந்தியா, தொண்டூழியம் மனநிறைவை அளிக்கும் ஒரு வெகுமதி என்றார்.

மேலும், பிள்ளைகளின் பெற்றோர் சிலர் சந்தியாவுக்கு நன்றி கூறும் விதத்தில் எழுதும் வாழ்த்தட்டைகள் தன்னை நெகிழவைப்பதாகக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!