‘காய்கறி என்சிலாடாஸ்’ செய்வது எப்படி?

மத்திய அமெரிக்காவில் விரும்பி உண்ணப்படும் ‘என்சிலாடாஸ்’ பதார்த்தத்தை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பார்க்கலாம்! சைவ சாப்பாடு மட்டும் சாப்பிடுபவர்களுக்கும் ஏற்ற இந்த உணவுப்பொருளை எங்களுடன் பகிர்ந்தார் நேயர் சுதா ரவி:

தேவையான பொருட்கள்

A) ஒரு பாக்கெட் டார்டிலா

B) சாஸ் செய்ய தேவையான பொருட்கள்

- ஒரு குவளை அரைத்த தக்காளி

- ஒரு குவளை மைதா மாவு

- ஒரு குவளை தண்ணீர்

- மூன்று மேசைக்கரண்டி எண்ணெய்

- ஒரு மேசைக்கரண்டி ஒரிகனோ

- ஒரு மேசைக்கரண்டி மிளகாய்த் தூள்

- ஒரு மேசைக்கரண்டி சீரகத்தூள்

- ஒரு மேசைக்கரண்டி மிளகுத் தூள்

- ஒரு மேசைக்கரண்டி சீனி

- ஒரு மேசைக்கரண்டி உப்பு

C) டார்டிலா உள்ளே வைக்க தேவையான பொருட்கள்

- ஒரு குவளை காளான்

- ஒரு குவளை சோளம்

- ஒரு குவளை கீரை

- மூன்று மேசைக்கரண்டி எண்ணெய்

- அரை குவளை செடார் பாலாடைக்கட்டி (‘சீஸ்’)

- அரை குவளை மொசரில்லா பாலாடைக்கட்டி (‘சீஸ்’)

- ஒரு குவளை நறுக்கிய தக்காளி

அலங்காரத்திற்கு:

- ஒரு குவளை வெங்காயத்தாள்/ பச்சை குடமிளகாய்

- கால் குவளை செடார் பாலாடைக்கட்டி (‘சீஸ்’)

- கால் குவளை மொசரில்லா பாலாடைக்கட்டி (‘சீஸ்’)

சாஸ் செய்முறை:

சமையல் பாத்திரம் ஒன்றை எடுத்து மிதமாகச் சூடுசெய்து அதில் மூன்று கரண்டி எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடேறிய பிறகு மைதா மாவைச் சேர்த்து நன்றாக வறுக்கவேண்டும்.

மாவு கொஞ்சம் நிறம் மாறிய பிறகு தக்காளிச் சாற்றை ஊற்றிக் கலக்கவேண்டும். அதன் பிறகு ஒரிகனோ, மிளகாய்த் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து, கட்டி வராமல் நன்றாகக் கலக்கவேண்டும்.

பிறகு ஒரு குவளை தண்ணீரை அதில் கலக்கி, ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவேண்டும். சாஸ் தயாராகிவிட்டது! இதை ஒரு பக்கமாக வைத்துவிடுங்கள்.

என்சிலாடா உள்ளே வைக்கப்படும் கலவை:

சமையல் பாத்திரம் ஒன்றுக்குள் மிதமான சூட்டில் நறுக்கப்பட்ட காய்கறிகளான காளான், கீரை, தக்காளி, சோளம் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தேவைக்கேற்ப கொஞ்சம் உப்பும் மிளகுத் தூளும் சேர்த்து வதக்க வேண்டும். காய்கறிகள் வதங்கிய பின் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து செடார், மொசரில்லா சீஸ் சேர்த்துக் கிளறுங்கள்.

என்சிலாடா செய்முறை:

ஒரு தோசைக் கல்லில் டார்டிலாவை மிதமான சூட்டில் வாட்டி எடுக்கவேண்டும். பிறகு, அந்த டார்டிலாவில் நாம் வதக்கிய காய்கறி கலவையை வைத்து நன்றாகச் சுருட்டுங்கள்.

டார்டிலா மீது நாம் செய்து வைத்திருக்கும் சாஸ்ஸை, டார்டிலா மீது முழுமையாக ஊற்றவேண்டும். ஆறு மேசைக்கரண்டி வரை ஊற்றலாம். இந்தக் கலவையின்மீது இரண்டு விதமான சீஸ் தூவவும்.

பிறகு மைக்ரோவேவ்வில் இரண்டு நிமிடம் வைத்து எடுத்தால் சுவையான காய்கறி என்சிலாடாஸ் தயார்!

(படங்கள்: சுதா ரவி)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!