முந்திரிப்பருப்பு சாக்லெட் சிப்ஸ் குக்கீஸ்

தேவையான பொருட்கள்:

250 கிராம் உப்பு சேர்க்காத வெண்ணெய்
150 கிராம் சீனி
2 தேக்கரண்டி வென்னிலா எசென்ஸ்
1 முட்டை
400 கிராம் ‘செல்ஃப் ரைசிங்’ மாவு
1 தேக்கரண்டி பட்டைத்தூள்
உப்பு ஒரு சிட்டிகை
100 கிராம் சாக்லெட் சிப்ஸ்
100 கிராம் பொடித்த முந்திரிப்பருப்பு
அலங்கரிக்க சில முழு முந்திரிப்பருப்புகள்

செய்முறை:

வெண்ணெய், சீனி, வென்னிலா எசென்ஸ் ஆகியவற்றைக் கலந்து இலேசாகவும் மென்மையாகவும் வரும்வரை கேக் மிக்ஸரைக் கொண்டு அடித்துக்கொள்ளவும்.

அத்துடன் முட்டையைச் சேர்த்து மாவு ஒன்றாகக் கலக்கும் அளவிற்கு மீண்டும் அடித்துக்கொள்ளவும்.

மற்றொரு கிண்ணத்தில் மாவு, பட்டைத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு சலித்து எடுத்துக்கொள்ளவும்.

மாவு கையில் ஒட்டாத அளவிற்கு இருக்கவேண்டும். சாக்லெட் சிப்ஸையும் பொடித்த முந்திரிப்பருப்பையும் மாவுடன் கலக்கவும்.

மாவை உருண்டையாக உருட்டி அதன் மேல் முழு முந்திரிப் பருப்பை வைத்து இலேசாக தட்டி தட்டையாக்கி 12 முதல் 15 நிமிடங்களுக்கு 180 டிகிரி செல்சியசில் அவனில் வைத்து எடுக்கவும்.

குக்கீஸ்கள் இளம் பழுப்பு நிறத்திற்கு வரும்போது அதை எடுத்து வெளியே வைத்து ஆறவைத்து எடுத்தால் சுவையான சாக்லெட் சிப்ஸ் கலந்த முந்திரிப்பருப்பு குக்கீஸ் தயார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!