ஏலக்காய் காப்பி சாக்லெட் சிப்ஸ் குக்கீஸ்

தேவையான பொருட்கள்:

250 கிராம் உப்பு சேர்க்காத வெண்ணெய்
150 கிராம் சீனி 
 2 தேக்கரண்டி வென்னிலா எசென்ஸ்
 1 முட்டை 
 400 கிராம் ‘செல்ஃப் ரைசிங்’ மாவு
 1 தேக்கரண்டி ஏலக்காய்த்தூள்
 2 தேக்கரண்டி உடனடி காப்பி பவுடர்
 உப்பு ஒரு சிட்டிகை
 100 கிராம் சாக்லெட் சிப்ஸ்

செய்முறை:

வெண்ணெய், சீனி, வென்னிலா எசென்ஸ் ஆகியவற்றைக் கலந்து இலேசாகவும் மென்மையாகவும் வரும்வரை கேக் மிக்ஸரைக்கொண்டு அடித்துக்கொள்ளவும்.

அத்துடன் முட்டையைச் சேர்த்து மாவு மென்மையாகும்வரை பிசைந்து எடுக்கவும்.

மற்றொரு கிண்ணத்தில் மாவு, ஏலக்காய்த்தூள், காப்பித்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு சலித்து எடுத்துக்கொள்ளவும்.

மாவு கையில் ஒட்டாத அளவிற்கு அனைத்தையும் ஒன்றாகப் பிசைந்து வைக்கவும்.

சாக்லெட் சிப்ஸையும் மாவுடன் கலக்கவும். பட்டர் பேப்பரில் 10 கிராம் அளவிற்கு மாவை உருண்டையாக உருட்டி தட்டில் வைத்து, லேசாக தட்டி தட்டையாக்கி 12 முதல் 15 நிமிடங்களுக்கு 180 டிகிரி  செல்சியசில் அவனில் வைத்து எடுக்கவும்.

குக்கீஸ்கள் இளம் பழுப்பு நிறத்திற்கு வரும்போது குக்கீஸ்களை எடுத்து வெளியே வைத்து அதை ஆறவைத்து எடுத்தால் சுவையான ஏலக்காய் காப்பி சாக்லெட் சிப்ஸ் குக்கீஸ்கள் தயார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!