கோழி குருமா

(4 பேருக்குப் பரிமாறக்கூடிய அளவு)

தேவையானப் பொருட்கள்:

4 தோல் நீக்கிய கோழிக் கால் பகுதி அல்லது தொடைப்பகுதி (பெரிய துண்டுகளாக வெட்டப்பட்டது)

5 உருளைக்கிழங்குகள் (தோல் நீக்கி, 4 பாகங்களாக வெட்டியது)

சிறிதளவு சூரியகாந்தி எண்ணெய்  அல்லது கனோலா எண்ணெய்

6 சின்ன வெங்காயம் (உரித்து, நசுக்கியது)

5 பற்கள் வெள்ளைப்பூண்டு (உரித்து, நசுக்கியது)

1 பொட்டலம் குருமா மசாலா

2 மேசைக்கரண்டி மிளகாய் சாந்து 

3 தண்டுகள் கறிவேப்பிலை 

3 தண்டுகள் லெமன் கிராஸ் (நசுக்கப்பட்டு, சிறு துண்டுகளாக வெட்டியது)

1 துண்டு கலாங்கால் / லெங்குவாஸ் இஞ்சி 

1 டின் கொழுப்பு குறைவான தண்ணீர்ப்பால்  

2 மேசைக்கரண்டி தக்காளி சுவைச்சாறு 

1 மேசைக்கரண்டி கறி மசாலைத்தூள்

ஒரு சிட்டிகையளவு உப்பு

செய்முறை:

1) தோல் நீக்கிய கோழித் துண்டுகளில் ஒரு சிட்டிகை உப்பைத் தடவி, பிறகு கறி மசாலைத்தூள் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

2) ஒரு கடாயில் சமையல் எண்ணெய்யை ஊற்றி, அது சூடானதும், உருளைக்கிழங்குத் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

3) வெங்காயத்தையும் பூண்டையும் மணம் வரும் வரை வறுக்கவும்.

4) குருமா மசாலா, மிளகாய் சாந்து, கறிவேப்பிலை, லெமன் கிராஸ், கலாங்கால் / லெங்குவாஸ் இஞ்சி ஆகியவற்றை அதில் சேர்க்கவும். மிதமான சூட்டில் கிளறிவிட்டு, அடுப்பின் சூட்டைக் குறைத்து மணம் வரும் வரை வறுக்கவும்.

5) அந்தக் கலவையில் கோழி துண்டுகளைப் போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். கடாயை மூடி 5 முதல் 10 நிமிடங்கள் குறைந்த சூட்டில் வேகவிடவும்.

6) வதக்கிய உருளைக்கிழங்குத் துண்டுகளையும், தேவையான அளவு தண்ணீரையும் அதில் சேர்க்கவும் (சமையல் பொருட்கள் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்தால் போதும்). கடாயை மூடி குறைந்த சூட்டில் சுமார் 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.

7) தண்ணீர்ப்பால், தக்காளி சுவைச்சாறு, கறி மசாலைத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். மேலும் 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

8) பழுப்பரிசி சாதம், முழுதானிய ரொட்டி அல்லது சப்பாத்தியுடன் சூடாகப் பரிமாறவும்.

சமையல் குறிப்பு: சுகாதார மேம்பாட்டு வாரியம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!