உலக அங்கீகாரம் பெறும் சிங்கப்பூர் உணவகச் சமையல்

உலகத்திலேயே மிகச் சிறந்த ‘சில்லி’ நண்டு சிங்கப்பூரில் உள்ளதாம். இங்குள்ள ‘ஜம்போ சீஃபுட்’  உணவகங்களில் கிடைக்கிறதாம். சிங்கப்பூரில் விரும்பி சாப்பிடப்படும் ‘லக்சா’ பதார்த்தத்தில் மிகச் சிறந்தது ‘நேஷனல் கிட்சன்’  உணவகத்தில் விற்கப்படுவதாகவும் ‘டேஸ்ட்அட்லஸ்’ ( TasteAtlas) என்ற உணவு இணையத்தளம் தெரிவித்துள்ளது.

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 550,000 பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள இந்தத் தளம் 63,000க்கும் அதிகமான மதிப்பீடுகளின் அடிப்படையில் உலகின் 100 சிறந்த பாரம்பரிய உணவுப் பட்டியலை உருவாக்கியுள்ளது. இத்தாலியின் பீட்ஸா மார்கரித்தா, துருக்கியின் அடானா கெபாப், ஜப்பானின் ராமென் ஆகியவை அந்தப் பட்டியலின் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன. இதில் லக்சா, 27ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. ஜம்போவின் சில்லி கிராப் 78ஆவது இடத்தில் உள்ளது. ஜாலான் பர்சேயிலுள்ள ‘சுங்கை ரோடு லக்சா’ கடையின் ‘கறி லக்சா’ (93ஆம் இடம்) சின் மிங் ரோட்டின் ‘சேங் டக் சைஸ்’ (99ஆம் இடம்) ஆகியவையும் பட்டியலில் இடம்பெற்றன. 

உலகின் தலைசிறந்த பாரம்பரிய உணவகங்கள் என்ற பட்டியலில் ‘மிஸ்டர் அண்ட் மிசர்ஸ் மோகன்ஸ் சூப்பர் கிறிஸ்பி ரொட்டி பிராட்டா’ ( Mr and Mrs Mohgan's Super Crispy Roti Prata) என்ற இந்திய உணவுக்கடை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!