கொவிட்-19: கனடாவுக்கு வரும் இந்திய விமானங்களுக்கு 30 நாட்கள் தடை

கனடாவின் வெண்கூவர் அனைத்துலக விமான நிலையத்தில், நாடுக்கு வரும் பயணிகளை கொவிட்-19 கிருமித்தொற்று சோதனைக்கு உட்படுத்த தயார் நிலையில் இருக்கும் கனடா சுகாதார ஊழியர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரம் இந்தியாவில் மோசம் அடைந்துள்ள நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா அரசு 30 நாட்கள் தடை விதித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொவிட்-19 கிருமித்தொற்று 314,000க்கும் மேட்பட்டவர்களை பாதித்துள்ளதை தொடர்ந்து இந்த தடை உடனடியாக நடப்புக்கு வரும் என்று கனடாவின் போக்குவரத்து அமைச்சர் திரு ஒமார் தெரிவித்தார்.

பயணிகள் விமானங்களுக்கு இந்த 30 நாள் தடை பொருந்தும் ஆனால் சரக்கு விமானங்களுக்கு இந்த தடை இருக்காது.

இந்தியாவிலிருந்து கனடாவுக்கு விமானம் வழி வரும் பயணிகளின் எண்ணிக்கையில் பாதி பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது சோதனைக்குப் பிறகு தெரிய வந்துள்ளதால் இந்த தடை விதிக்கப்படுவதாக கனடாவின் சுகாதார அமைச்சர் கூறினார்.

பாகிஸ்தானிலிருந்து வரும் பயணிகளிலும் கொவிட்-19 கிருமித்தொற்று அதிகரித்த நிலையில் இருக்கிறது.

கனடாவின் விமான போக்குவரத்து வருகையாளர் பட்டியலில் 20% விமானங்கள் இந்தியாவிலிருந்து வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடாவில் வாழும் மக்களில் 1 மில்லியனுக்கு மேற்பட்டோர் இந்திய வம்சாவளியினர்.

#கொவிட்-19 #கனடா #இந்தியா #பாகிஸ்தான்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!