சட்டவிரோத  முகக்கவச உற்பத்தி:  நிறுவனம் மீது விசாரணை

சுகாதார அறிவியல் ஆணையம் நிறுவனம் அதன் வளாகத்தில் தயாரித்த அனைத்து முகக் கவசங்களையும் கைப்பற்றியது.
படம்: சுகாதார அறிவியல் ஆணையம்

உரிமம் இல்லாமல் அறுவை சிகிச்சை முகக்கவசங்களை சிங்கப்பூரில் உற்பத்தி செய்த உள்ளூர் நிறுவனம் மீது விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று அதனைத் தெரிவித்தது.

சட்டவிரோதமாக முகக்கவசம் உற்பத்தி செய்ததாக ஒரு நிறுவனம் மீது சந்தேகம் எழுந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

உபி கிரெசண்ட்டில் இருக்கும் விஷன் எம்பயர் நிறுவனத்தின் வளாகத்தில், சுகாதாரமற்ற, தற்காலிகமாக அமைக்கப்பட்ட இடத்தில் உற்பத்தி நடந்ததாகக் கூறப்பட்டது.

அங்கே உற்பத்தி செய்யப்பட்ட முகக்கவசங்கள் அட்டைப் பெட்டிகளில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்தன.

மொத்தம் 33 அட்டைப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டன.

ஒவ்வொன்றிலும் 2,500 முகக்கவசங்கள் இருந்தன.

சுகாதாரப் பொருட்கள் சட்டத்தின் கீழ், சுகாதார அறிவியல் ஆணையத்திடம் உரிமம் பெற்றால்தான் நிறுவனங்கள் முகக்கவசங்களை உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படும்.

அத்துடன் விஷன் எம்பயர் இண்டர்நேஷனல் நிறுவனம் முகக்கவசங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து அவற்றை வேறு பெயர் கொண்ட பெட்டிகளில் வைத்து அடுக்கி மீண்டும் விற்றதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேகத்துக்கு உள்ளான நிறுவனம், உரிமம் இன்றி தான் தயாரித்த அறுவை சிகிச்சை முகக்கவசங்களையும் மறுவிற்பனை செய்தவற்றையும் ‘விஷன் எம்பயர் ஹெல்த்கேர்’ எனும் பெயரில் விற்றது.

நிறுவனம் தயாரித்த முகக்கவசங்களும் மறுவிற்பனை செய்த முகக்கவசங்களும் இங்குள்ள மின் வர்த்தகத் தளங்களில் 10 வெள்ளி முதல் 22 வெள்ளி வரையிலும் விற்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணை கூறியது.

அப்பெயர் கொண்ட முகக்கவசங்களை வாங்கியிருந்தால் அவற்றைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தும்படி சுகாதார அறிவியல் ஆணையம் அறிவுறுத்தியது.

மின்வர்த்தகத் தளங்களில் அந்த முகக்கவசங்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

#கொவிட்-19 #குற்றம் #முகக்கவசம்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!