வாஷிங்டன்: ஃபைசர் தடுப்பூசி மருந்தை மருந்து நிறுவனங்களில் காணப்படும் குளிரூட்டியிலேயே வைத்திருக்க அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
ஃபைசர் தடுப்பூசி மருந்து மருந்தகங்களில் உள்ள குளிரூட்டியில் இரண்டு வாரங்கள் வரை வைத்திருக்க முடியும் என்பதால் அமெரிக்க உணவு பொருட்கள், மருந்துப் பொருட்களை நிர்வகிக்கும் அமைப்பு இவ்வாறு கூறியுள்ளதாக ஏஎஃப்பி செய்தித் தகவல் கூறுகிறது.
ஃபைசர் தடுப்பூசி மருந்து உறைநிலைக்குக் கீழ் -80லிருந்து -60டிகிரி செல்சியஸ் குளிரில் வைக்கப்பட வேண்டும் என்ற விதியை இது தளர்த்துவது குறிப்பிடத்தக்கது.
“இது இந்த தடுப்பூசி மருந்தை ஆங்காங்கு விநியோகிக்கவும் அதை சேமிப்பதற்காக அதிகக் குளிர்ச்சியான குளிரூட்டிகளை தருவிக்க வேண்டிய நிலையையும் தவிர்க்கும்.
அத்துடன், இந்தத் தடுப்பூசி மருந்தை பல இடங்களுக்கு விநியோகிக்கவும் ஏதுவாக இருக்கும்,” என்று அமைப்பின் இயக்குநர் பீட்டர் மார்க்ஸ் என்பவர் விளக்கினார்.
மருந்தக நிறுவனங்களில் உள்ள குளிரூட்டிகள் பொதுவாக -20 டிகிரி செல்சியஸ் குளிர்ச்சியைக் கொண்டிருக்கும் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
இந்த தடுப்பூசி மருந்து உறைநிலையிலிருந்து ஒருவருக்கு செலுத்தும் பதத்துக்கு வந்தால், அதை சாதாரணமாகப் பயன்படுத்தும் குளிரூட்டியில் ஐந்து நாட்களே
வைத்திருக்க முடியும் என்று கூறப்படுகிறது.