மற்றொரு வெளிநாட்டு ஊழியருக்கும் கிருமித்தொற்று; மொத்த எண்ணிக்கை 47 ஆனது

இன்று கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றொரு நபர் 35 வயதான சிங்கப்பூர் நிரந்தரவாசி. ஜோகூர் பாருவில் வசிக்கும் இவர் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவின் சூதாட்டக்கூடத்தில் பணிபுரிபவர். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் மேலும் இருவருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பதை சுகாதார அமைச்சு இன்று (பிப்ரவரி 11) உறுதி செய்துள்ளது. கிருமித்தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆகியுள்ளது.

புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரில் ஒருவர் 39 வயதான பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஊழியர். கடந்த சனிக்கிழமை கிருமித் தொற்று இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு பங்ளாதேஷ் ஊழியருடன் சிலேத்தார் ஏரோஸ்பேஸ் ஹைட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் நபர் என்று கூறப்பட்டது.

ஆனால் இவ்விருவரும் ஒரே வளாகத்தில் தங்கியிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இன்று கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றொரு நபர் 35 வயதான சிங்கப்பூர் நிரந்தரவாசி. ஜோகூர் பாருவில் வசிக்கும் இவர் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவின் சூதாட்டக்கூடத்தில் பணிபுரிபவர்.

இவ்விருவரும் அண்மையில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கவில்லை.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் 38 நோயாளிகளில் எழுவரின் உடல்நிலை இக்கட்டான நிலையிலேயே நீடிப்பதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உடல் நலம் தேறி வீடு திரும்பியுள்ளனர். இத்துடன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9 ஆகியுள்ளது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரான ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா சூதாட்டக்கூடத்தின் ஊழியருக்கு (கிருமி தொற்றிய 46வது நபர்) கிருமித் தொற்றின் அறிகுறிகள் இம்மாதம் ஐந்தாம் தேதி தோன்றியதாகவும் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) தனியார் மருந்தகத்தில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்பட்டது.

டான் டோக் செங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவர் தற்போது தேசிய தொற்று நோய்த் தடுப்பு நிலையத்தில் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

வேலை அனுமதிச் சீட்டுடன் இங்கு பணிபுரியும் பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஆடவர், கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்ட 47வது நபர்.

கடந்த 6ஆம் தேதி அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அதற்கு அடுத்த நாள் அவர் தனியார் மருந்தகத்தில் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார். நேற்று அவர் தேசிய தொற்று நோய் தடுப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக அவர் வீராசாமி ரோட்டில் இருக்கும் தனது வாடகைக் குடியிருப்பில் தங்கியிருந்தார்.

அவர், லியோ தங்குவிடுதியில் கிருமித்தொற்று இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பங்ளாதேஷ் நாட்டவருடன் ஒரே நிறுவனத்தில் பணிபுரிபவர் என்று கூறப்பட்டது.

கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் என்ற வகையில், இன்று மதியம் வரை 1,124 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 1,021 பேர் இன்னும் சிங்கப்பூரில் இருக்கின்றனர்.

அவர்களில் 989 பேர் ஏற்கெனவே தொடர்பு கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர். எஞ்சிய 32 பேரைக் கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.

#தமிழ்முரசு #கொரோனா #சிங்கப்பூர்


சிங்கப்பூர்
கொரோனா
47
பங்ளாதேஷ்
வெளிநாட்டு
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!