சுகாதார அமைச்சு அதிகாரிகளுடன் அணுக்கமாகப் பணியாற்றும் போலிஸ் அதிகாரிகள்

போலிஸ் கண்டோன்மென்ட் வளாகத்தில் உள்ள கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் நடவடிக்கை நிலையத்தின் செயல்பாடுகளைப் பார்வையிடுகிறார் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம். படம்: சிங்கப்பூர் போலிஸ் படை

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் தேடிக் கண்டுபிடிக்கும் பெரிய பொறுப்பு போலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தங்களிடம் உள்ள புலனாய்வு தொடர்பிலான நிபுணத்துவத்தைக் கொண்டு அதை செய்கின்றனர் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.

“தங்களது வழக்கமான குற்றத்தடுப்பு வேலையையும் தாண்டி, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் முக்கியமான பணி, கிருமித்தொற்றைத் தடுக்கும் நாட்டின் தேசிய பணியில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

“அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையையும் சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையையும் செவ்வனே செய்யமுடியும்,” என்றும் திரு சண்முகம் விவரித்தார்.

“ஒருவருக்கு நோய் இருப்பது தெரிய வந்தால், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு நிறைய கவனமான புலனாய்வுப் பணிகள் தேவைப்படும். அதில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அவரது தொடர்புகளைக் கண்காணிப்பதும் அடங்கும்.

“சிங்கப்பூர் போன்ற பரபரப்பான நகரில் ஒருவரது நடமாட்டத்தையும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் கண்டுபிடிப்பது எளிதான காரியமல்ல. ஆக அதிகாரிகளின் பணி மிகவும் தீவிரமானது,” என்று அமைச்சர் வர்ணித்தார்.

சுகாதார அமைச்சு அதிகாரிகளுடன் அணுக்கமாகப் பணியாற்றும் போலிஸ் அதிகாரிகள் உள்ளூர் கிருமித்தொற்றுக்குக் காரணமான ஓர் இடத்தைக் கண்டுபிடித்தார்கள். அந்த ஓர் இடத்துக்குக் கிருமித்தொற்றிய ஐவர் சென்றிருந்தது தெரிய வந்தது.

அவர்களில் மூவர் பாய லேபார் ரோட்டில் உள்ள ஒரு தேவாலயத்துக்குச் சென்று வந்தவர்கள். மற்ற இருவர் கொரோனா கிருமித்தொற்று மைய இடமான வூஹான் நகரிலிருந்து இங்குள்ள உறவினர்களைச் சந்திக்க வந்தவர்கள். அவர்களும் அந்தத் தேவாலயத்துக்குச் சென்றனர்.

இந்த ஐவருக்குள்ள தொடர்பை உறுதிப்படுத்த ஒரு நாள் எடுத்தது. அதற்கு நேர்காணல்கள், பல்வேறு தரவுகளை உபயோகித்தல், கண்காணிப்பு கேமராக்களின் ஒளிப்பதிவுகளைப் பார்த்தல் ஆகியவற்றின் மூலம் சாத்தியமானது.

போலிஸ் கண்டோன்மென்ட் வளாகத்தில் உள்ள கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் நடவடிக்கை நிலையத்தின் செயல்பாடுகளை நேற்று பார்வையிட்டார்் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம்.

“கிருமித்தொற்று தொடர்பிலான இந்த சவால்மிக்க பணியை மேற்கொள்ளும் போலிஸ் அதிகாரிகள் மிக விரைவில் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் மிகவும் சிரத்தையோடு மேற்கொள்கின்றனர்,” என்றார் போலிஸ் குற்றவியல் புலனாய்வுத் துறையின் ஒருங்கிணைந்த குற்றப் பிரிவின் உதவி இயக்குநரான துணை உதவி ஆணையாளர் டெக்குலன் கோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!