கொரோனா: வியட்னாமில் 15 பேர் பாதிப்பு

ஹனோய்: வியட்னாமில் மேலும் ஒருவர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிப்படைந்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

ஹனோய்: வியட்னாமில் மேலும் ஒருவர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிப்படைந்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வியட்னாமில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிப்படைந்திருப்போர் எண்ணிக்கை 15க்கு உயர்ந்துள்ளது. ஆக அண்மையில் மூன்று மாதக் குழந்தை ஒன்றுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அந்தக் குழந்தையின் பாட்டியிடமிருந்து அதற்கு அந்தக் கிருமி பரவியது. நோய்வாய்ப்பட்டுள்ள 15 பேரில் 10 பேர் வியட்னாமின் வடக்குப் பகுதியில் உள்ள வின் புக் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சீனாவிலிருந்து திரும்பும் நூற்றுக்கணக்கான தனது நாட்டவர்களைத் தனிமைப்படுத்த வியட்னாம் திட்டமிட்டுள்ளது. தலைநகர் ஹனோய்க்கு வெளியே இருக்கும் ராணுவ முகாம்களில் 950 பேரைத் தனிமைப்படுத்த வியட்னாம் ஏற்பாடு செய்து வருகிறது. மேலும் 900 பேர் வியட்னாம்-சீன எல்லையில் உள்ள தற்காலிக முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவர்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!