அதிக விலையில் முகக்கவசங்கள்; விளக்கம் கேட்கும் அமைச்சு

முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த சில்லறை வர்த்தகர் அதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

முகக்கவசங்கள் விற்பனை, மொத்த விற்பனையாளரிடம் அவற்றை வாங்கிய விலை, அவற்றின் மூலம் கிடைத்த லாபம் ஆகியவற்றை தெரிவிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்படி 3 ஸ்டார்ஸ் நிறுவனத்துக்கு அமைச்சு நேற்று உத்தரவிட்டது.

அந்த நிறுவனம் இன்றைக்குள்  அமைச்சுக்குப் பதிலளிக்க வேண்டும். இல்லாவிடில் முதல்முறை குற்றத்துக்காக $10,000 வரை அபராதம், தொடர்ந்து அக்குற்றத்தைச் செய்தால் $20,000 அபராதமும் விதிக்கப்படலாம்.

தமது தொகுதியில் ஒரு பெட்டி முகக்கவசம் $138க்கு விற்கப்படுவதைக் காட்டும் படத்தை  நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லுயிஸ் இங்  கடந்த சனிக்கிழமையன்று ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருந்தார்.

Loading...
Load next