நீண்டகாலம் தாக்குப்பிடிக்கும் கிருமிநாசினியால் சாங்கி விமான நிலையம் சுத்திகரிப்பு

இந்தக் கிருமி நாசினியை ஒருமுறை பயன்படுத்தினால், அது ஆறு மாதங்களுக்குத் தாக்குபிடிக்கும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கொரோனா கிருமித்தொற்று பரவாமல் இருக்க சாங்கி விமான நிலையம் அதன் துப்புரவுப் பணிகளை மேம்படுத்தியுள்ளது.

ஆறு மாதங்களுக்குத் தாக்குபிடிக்கும் கிருமி நாசினியைக் கொண்டு விமான நிலையத்தில் உள்ள மின்தூக்கிப் பொத்தான்கள், தானியங்கி பதிவு இயந்திரம் ஆகியவை உட்பட மற்ற இடங்களும் சுத்தம் செய்யப்படுகின்றன.

இந்தக் கிருமி நாசினியை ஒருமுறை பயன்படுத்தினால், அது ஆறு மாதங்களுக்குத் தாக்குபிடிக்கும்.

இந்தக் கிருமி நாசினி சுற்றுப்புறத்துக்கு கேடு விளைவிக்காது என்றும் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, சாங்கி விமான நிலையத்தின் நான்கு முனையங்களிலும் ஜுவல் சாங்கி நிலையத்திலும் ஆங்காங்கே கூடுதலாக ஏறத்தாழ 1,000 கிருமி நாசினி போத்தல்கள் வைக்கப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களும் முன்பைக்காட்டிலும் மேலும் அதிக முறை சுத்தம் செய்யப்படுகின்றன.

“உலகெங்கும் கொரோனா கிருமித்தொற்றுக்கான நிலை எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. இருப்பினும், சாங்கி விமான நிலையம் தொடர்ந்து இயங்குவது மிகவும் முக்கியம்.

“இதை உறுதி செய்ய விமான நிலைய ஊழியர்கள், பயணிகள் ஆகியோரின் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க நாங்கள் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளோம்,” என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்துள்ளது.

#தமிழ்முரசு #சாங்கி விமான நிலையம் #கொரோனா #கிருமிநாசினி

சாங்கி விமான நிலையம்
கொரோனா
கிருமிநாசினி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!