சிங்கப்பூரில் மேலும் 8 பேருக்கு கிருமித்தொற்று; மொத்த எண்ணிக்கை 58

சிங்கப்பூரில் மேலும் எட்டுப் பேர் 'கொவிட்-19' கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார  அமைச்சு இன்று (பிப்ரவரி 13) தெரிவித்தது. 

அந்த எட்டுப் பேரும் ஏற்கெனேவ கிருமித்தொற்று பாதிப்பு கண்டவர்களுடன் தொடர்புைடயவர்கள் எனக் கூறப்பட்டது.

அவர்களுடன் சேர்த்து சிங்கப்பூரில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக கிருமித்தொற்று கண்ட அந்த எட்டுப் பேரில் ஐவர் 'தி கிரேஸ் அசெம்பிளி ஆஃப் காட்' தேவாலயத்துடன் தொடர்புைடயவர்கள் என்றும் அவர்களுள் ஒருவர் சிங்கப்பூர் தேசிய பல்கைலக்கழகத்தில் பணியாற்றும் 54 வயதுப் பேராசிரியர் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

ஆயினும், உடல்நலக்குைறவு ஏற்பட்ட பின்னர் அந்தப் பேராசிரியர் சக ஊழியர்களுடனும் மாணவர்களுடனும் கலந்துறவாடவில்லை.

மற்ற நால்வரில் மூவர் 26, 48, 58 வயதுள்ள ஆடவர்கள்; இன்னொருவர் 54 வயது நிரம்பிய பெண்மணி.

அந்தத் தேவாலயத்துடன் தொடர்புைடயவர்களில் இதுவரை எழுவருக்கு 'கொவிட்-19' கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனிைடேய, 30 மற்றும் 37 வயது நிரம்பிய பங்ளாேதஷ் ஆடவர் இருவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலை அனுமதிச்சீட்டில் இங்குள்ள அவ்விருவரும் 'சிலேத்தார் ஏேராஸ்பேஸ் ஹைட்ஸ்’ பணியிடத்துடன் தொடர்புைடயவர்கள். இதுவரை அந்தப் பணியிடத்துடன் தொடர்புைடய நால்வருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

கிருமித்தொற்று பாதிப்பு இருப்பதாக இன்று உறுதிசெய்யப்பட்டோரில் கடைசி நபர் 30 வயது சிங்கப்பூர் ஆடவர். 

அவர் நேற்று கிருமித்தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்ட 62 வயது டிபிஎஸ் வங்கி ஊழியரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இந்த எட்டுப் பேரும் சீனாவிற்குச் சென்று வந்தவர்கள் அல்லர். அவர்கள் அனைவரும் தற்போது தேசிய தொற்றுநோய்கள் மையத்தில் தனிைமப்படுத்தப்பட்டுள்ளனர்.

கிருமித்தொற்றுப் பாதிப்பை உறுதிப்படுத்த ஆய்வகச் சோதனைகளையே நம்பியிருப்பதாகச் சுகாதார அமைச்சு கூறியுள்ளது. 

பாதிப்பை உறுதிசெய்ய அந்த நடைமுறையே தொடரும் என்றும் அமைச்சு தெரிவித்தது.

#தமிழ்முரசு #கொரோனா #சிங்கப்பூர்

Loading...
Load next