மார்ச் 16 வரை மூடப்படும் ஹாங்காங் பள்ளிகள்

ஹாங்காங்: கொரோனா கிருமித்தொற்று குறித்து மக்களிடையே பதற்றம், கவலை மேலோங்கி இருக்கும் நிலையில், பள்ளிகளை குறைந்தது மார்ச் மாதம் 16ஆம் தேதி வரை மூட ஹாங்காங் முடிவு செய்துள்ளது.

இந்தத் தகவலை ஹாங்காங்கில் கல்வி அமைச்சர் கெவின் யுவேங்  நேற்று வெளியிட்டார்.

“மருத்துவ நிபுணர்களின் கருத்துகளை நாங்கள் கேட்டு அதன்படி நடந்து வருகிறோம். நிலைமை மேம்பட்டதும் பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து அறிவிப்போம்,” என்றார் திரு யுவேங். அண்மைய சீனப் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு ஹாங்காங் மாணவர்கள் இன்னும் பள்ளிக்குத் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Loading...
Load next