தடை: பிலிப்பீன்சுக்கு தைவான் எச்சரிக்கை

தைப்பே: தனது குடிமக்களுக்கு எதிராக பிலிப்பீன்ஸ் விதித்திருக்கும் பயணத் தடையை அது மீட்டுக்கொள்ளாவிட்டால், அதற்கு எதிராக பதில் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தைவான் எச்சரித்துள்ளது. தைவானின் தொழிற்சாலைகளிலும் இல்லங்களிலும் 115,000 பிலிப்பீன்ஸ் குடிமக்கள் பணியாற்றுகிறார்கள். சீனாவுடன் சேர்த்து தைவான் மக்களும் தனது நாட்டுக்குள் நுழையக்கூடாது என்று பிலிப்பீன்ஸ் அண்மையில் தடை விதித்தது.  இது தவறான முடிவு என்று ஏற்கெனவே தைவான் கண்டனம் தெரிவித்தது. 
 

Loading...
Load next