ஹுபெய், வூஹான் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பதவி பறிப்பு

பெய்ஜிங்: கொவிட்-19 கிருமித்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஹுபெய் மாநிலம் மற்றும் வூஹான் நகருக்கான கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் நீக்கப்பட்டு, புதியவர்கள் பொறுப்பில் அமர்த்தப்பட்டனர்.

ஹுபெய் மாநில கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியில்இருந்து ஜியாங் சாவ்லியாங், 61, பதவிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக, ஷங்ஹாய் நகர மேயரான யிங் யோங் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

அதேபோல, வூஹான் நகரத்தின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து மா குவோஸியாங், 56, விடுவிக்கப்பட்டதாகவும் வாங் ஸோங்லின், 57, புதிய தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறின.
 

Loading...
Load next