கொரோனா: ஒரே நாளில் 105 பேரைக் கொன்றது

சீனாவில் கொரோனா கிருமித்தொற்று மரண எண்ணிக்கை 1,775ஐ தொட்டுவிட்டது. ஞாயிற்றுக்கிழமை அன்று அங்கு 105 பேர் பலியாகிவிட்டார்கள் என்று அந்த நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்

சீனாவில் கொரோனா கிருமித்தொற்று மரண எண்ணிக்கை 1,775ஐ தொட்டுவிட்டது. ஞாயிற்றுக்கிழமை அன்று அங்கு 105 பேர் பலியாகிவிட்டார்கள் என்று அந்த நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளது.

சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹுபெய் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை 100 பேர் மாண்டதாகவும் அதன் அருகே உள்ள ஹெனான் மாநிலத்தில் மூவர் பலியானதாகவும் இதர இரண்டு பேர் தென்கிழக்கில் உள்ள குவாங்டோங்கில் மரணம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீனா முழுவதும் பார்க்கையில், ஞாயிற்றுக்கிழமை அந்த நோய் புதிதாக 2,048 பேரைத் தொற்றியிருப்பது தெரியவந்தது. கொரோனா கிருமி சீனாவில் மொத்தம் 70,548 பேரை பாதித்து உள்ளது.

ஹுபெய் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மொத்தம் 1,696 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 58,182 பேர் கிருமிகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று அந்த மாநிலத்தின் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதிதாக 24 மணி நேரத்தில் கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 5 விழுக்காடு கூடிவிட்டது.

ஆனாலும், சென்ற சனிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் மரண எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை குறைந்தது.

கொரோனா கிருமிஉருவானதாக நம்பப்படும் வூஹானில்தான் அந்தக் கிருமி புதிதாக அதிகம் பேரை பாதித்து இருப்பதாகத் தெரிகிறது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக மரணமடைந்தவர்களில் 77 விழுக்காட்டினர் வூஹானை சேர்ந்தவர்கள்.

என்றாலும் அந்த நகரத்தில் புதிதாக கிருமி பாதிப்புக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கடுமையான புதிய நடவடிக்கைகளை ஹுபெய் நேற்று அறிவித்தது.

தனியார் வாகனங்களை அனு மதிக்க வேண்டாம் என்று அந்த மாநில நகர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மக்களின் நடமாட்டத்தை அணுக்கமாகக் கண்காணிக்கும்படி கிராமங்களுக்கும் நகர்ப்பகுதி களுக்கும் அறிவுரை கூறப்பட்டது.

ஹுபெயில் நிலவரம் மேம்பட்டு வருவதாக நேற்று தெரிவித்த ஆணையம், கிருமிகள் கட்டுப்படுத்தப்பட்டு வருவதையே இது காட்டுவ தாகவும் கூறியது.

ஆனாலும் கொரோனா கிருமி களின் போக்கு எப்படி இருக்கும் என்பதைக் கணிப்பது இயலாத ஒன்றாக இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து உள்ளது.

இவ்வேளையில், கொரோனா கிருமித்தொற்று தொடர்பில் அனைத்துலக வல்லுநர்கள் பெய்ஜிங் சென்று சேர்ந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு அவர்கள் சீன அதிகாரி களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கிறார்கள் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் டுவிட்டரில் குறிப்பிட்டார்.

தாய்லாந்தில் மேலும் ஒருவர் கிருமியால் பாதிப்பு

பேங்காக்: தாய்லாந்தில் மேலும் ஒருவர் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து மொத்தம் 35 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருக் கின்றனர் என்று அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய சம்பவத்தில் அறுபது வயது மாதுக்கு கிருமித் தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இவரது குடும்ப உறுப்பினர்கள் ஏற்கெனவே கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள். சிகிச்சை பெற்றவர் களில் 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!