கோயில்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கோயில்களுக்கு வழங்கப்படும் கிருமி நாசினி போன்ற பொருட்களை பற்றி இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி த. ராஜசேகரிடம் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கேட்டு தெரிந்துகொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அர்ச்சகர்கள் இனி தங்கள் கைகளால் பக்தர்களின் நெற்றியில் திருநீறு அணிவிக்கக்கூடாது. தீர்த்தம் கொடுப்பதற்காகப் பயன்படுத்தும் கரண்டி, பக்தர்களின் கைகளைத் தொடக்கூடாது.

இவற்றுடன் கொரோனா கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்தும் மேலும் பல புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்து அறக்கட்டளை வாரியம் நேற்று அறிவித்தது.

சிங்கப்பூரிலுள்ள அத்தனை ஆலயங்களுக்கும் வெப்பமானிகள், சவர்க்காரங்கள், கிருமி நாசினிகள் உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கப்படும். இதற்குக் கிட்டத்தட்ட $60,000 செலவு செய்யப்படும்.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பொருமாள் கோயிலில் உள்ள பிஜிபி மண்டபத்தில் இந்து அறக்கட்டளை வாரியம், நேற்று மாலை நடத்திய கிருமித் தொற்று குறித்த தகவல் பகிர்வு நிகழ்ச்சியில் இந்த புதிய வழிகாட்டிகளைப் பற்றி ஆலய நிர்வாகிகளுடன் பகிர்ந்துகொண்டது.

கிட்டத்தட்ட 24 ஆலயப் பிரதிநிதிகள் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆலயத்தின் பணியாளர்களுக்கு இரண்டு முறை வெப்பநிலை பரிசோதனை (காலை ஒரு முறையும் மாலை ஒரு முறையும்) நடத்தப்படும். அத்துடன், பணியாளர்கள் அடிக்கடி தங்கள் கைகளைக் கழுவ வேண்டும். உணவுப் பொருட் களைக் கையாள்பவர்கள் முடிந்தவரை முகக்கவசங்களையும் கைஉறைகளையும் அணிந்துகொள்ளவேண்டும்.

ஆலயத்திற்காகத் தருவிக்கப்படும் பொருட்களைக் கொண்டுசெல்வோரும் வேலை செய்யும் குத்தகையாளர்கள் வரும்போதும் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து வெப்பநிலை சோதனைக்கு உள்ளாக வேண்டும் என்று வாரியம் தெரிவித்தது.

விநியோகப் பொருட்களை ஆலயத்திடம் ஒப்படைக்கும்போது கையை முடிந்தவரை கழுவ வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. கூட்டங்கள் அல்லது சந்திப்புகளுக்காக ஆலயங்களுக்குச் செல்வோர், கைகுலுக்குவதைத் தவிர்க்கவும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

நிலைமை மோசமானால் ஆலயத்திற்குள் நுழையும் ஒவ்வொருவருக்கும் வெப்பநிலை சோதனை செய்யப்படும்.

இந்த நிலையில் புதிய முயற்சிகள் வரவேற்கத்தக்கவை என்றார் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தகவல், தொடர்பு அமைச்சர் எஸ் ஈஸ்வரன்.

‘‘ கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் சமய அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவர்கள். எங்கெல்லாம் சமயக் கூட்டங்கள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் தகுந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது அவசியம்,’’ என்று அவர் குறிப்பிட்டார்.

‘‘தனிநபர், சமூக அமைப்புகள், ஆலயங்கள் உட்பட அனைவரிடத்திலும் ஒத்துழைப்பு அவசியம். ‘மக்களின் பதற்றத்திற்குக் காரணம் போலித் தகவல்கள். அவர்கள் gov.sg Whatsapp சேவையைப் பயன்படுத்தி தக்க தகவல்களைப் பெறலாம். மக்கள் பொறுப்பாக இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றினால் அது தேசிய முயற்சிக்கு ஒரு பங்களிப்பாகும்.

‘‘மக்கள் பதற்றமடைந்தால் நாம் செய்ய வேண்டியவற்றைச் செய்வது இன்னும் சிரமமாகும். எனவே மக்கள் நிதானமாக கவலைப்படாமல் இருந்தால் இந்தச் சவாலை நிச்சியம் சமாளிக்கலாம்,’’ என்றார் அவர்.

இதற்கிடையே மகா சிவராத்திரி பெருவிழா வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21ஆம் தேதி) மாலை தங்கு தடையின்றித் தொடரும் என்று இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் த. ராஜசேகர் தெரிவித்தார்.

“இந்து பஞ்சாங்கத்தில் இந்த ஒரு நாளில்தான் மகா சிவராத்திரி கொண்டாடப்படுவதால் இதனை ஒத்திவைப்பதோ ரத்து செய்வதோ சாத்தியமல்ல. ஆயினும் இதற்காக எங்களால் முடிந்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செயல்படுத்துவோம். தனிநபர்களும் அவரவர் உடல்நிலைக்குப் பொறுப்பேற்கவேண்டும்,” என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!