‘ஒன் சாம்பியன்ஷிப்’ போட்டி; அனைவருக்கும் அனுமதியில்லை

கொரோனா கிருமி பரவல் காரணமாக ‘ஒன் சாம்பியன்ஷிப்’ போட்டியைக் காண அனைவருக்கும் அனுமதியில்லை என்று நிர்வாகம் அறவித்துள்ளது. இந்தப் போட்டி இம்மாதம் 28ஆம் தேதி சிங்கப்பூர் உள்ளரங்கில் நடைபெறுகிறது.

கிருமி பரவல் பிரச்சினை காரணமாக குறிப்பிட்ட சிலர் மட்டுமே ‘ஒன் சாம்பியன்ஷிப்’ போட்டியைக் காண அனு மதிக்கப்படுவர் என்று தலைமை நிர்வாகியும் தலைவருமான சட்ரி சிட்யோட்டோங் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார். ஆனால் குத்துச் சண்டை போட்டி பல்வேறு தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று கூறிய அவர், ஏற்கெனவே நுழைவுச் சீட்டு வாங்கியவர்களுக்கு கட்டணம் திருப்பியளிக்கப்படும் என்றார்.