சீனாவுக்கு சிங்கப்பூரின் 2வது மனிதாபிமான உதவி

சீனாவுக்கான மனிதாபிமான உதவிப் பொருட்களை இரண்டாவது தவணையாக சிங்கப்பூர் நேற்று முன்தினம் அனுப்பியது. அதில் மருத்துவம் தொடர்பான உபகரணங்கள், சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான உதவிப் பொருட்களும் அடங்கும். அவற்றை சீனாவுக்கான சிங்கப்பூர் தூதர் திரு லுயி டக் இயூ, சீன ராணுவ பொது மருத்துவ மனையின் மருத்துவ சேவைப் பிரிவின் துணைத் தலைவர் ஸாங் ஃயுவிடம் அதிகாரபூர்வமாக பெய்ஜிங்கில் ஒப்படைத்தார்.

‘ஹேபிடாட் ’ பேரங்காடி இம்மாதம் 29ஆம் தேதி வரை மூடியிருக்கும்

உணவு மற்றும் விநியோக நிறுவனமான ‘ஹானஸ்பீ ’ நிறுவனம் நடத்தும் ‘ஹேபிடாட்’ பேரங்காடி இம்மாதம் 29ஆம் தேதி வரை மூடியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக அது இம்மாதம் 23ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.